Monday , November 20 2017

மாதவிடாய் வலியால் அவஸ்தையா? கவலை வேண்டாம்!

வயதிற்கு வந்த பெண்கள் தமது மாதவிடாய் காலத்தில் வலியை உணவருவது இயல்பான ஒன்றே.

எனினும் பத்தில் ஒரு பெண்கள் இவ்வாறான வலியால் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் மாதவிடாய் ஆரம்பித்து இரண்டு நாட்களுக்கு வலியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியினை தரும் வகையில் இலத்திரனியல் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சாதனமானது குறித்த வலியினை குறைக்கும் வகையில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

இது நரம்புத் தொகுதிக்கு அனுப்பப்படும் இலத்திரனியல் சமிக்ஞையினை தடுப்பதன் ஊடாக வலியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.

இதனை Livia எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மேலும் 163 பெண்களில் இச் சாதனத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 80 சதவீதம் வெற்றிகரமாக செயற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

The post appeared first on Akuranatoday.com