Thursday , May 25 2017

இன்றைய இளைஞர்களின் மதுபான கலாசாரம் பற்றிய ஆய்வு!


இலங்கைக்கு முதன் முதலாக பிரித்தானியர் காலத்தில் தான் மதுபானம் கொண்டுவரப் பட் டது. மது என்பது வேதனையை யும் கவலையையும் மறக்க வைப்பதற் குரிய ஒரு பானம் அல்ல.

அது ஒரு போதைப் பொருள். மனிதன் அதைக் குடிப்பதால் தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளாகக் குறைத்து இறுதியில் தன்னால் தானே அழிகின்றான்.ஆதிகாலத்தில் பிரித்தானியர்கள் கீழைத் தேய நாடுகளையும் தம்வசப்படுத்த அந்த நாட்டு மன்னர்களிடையே மதுவைக் கொடுத்து அவர்களையும் மதுவின் பால் கவரும் ஈர்ப்பு விசையாகப் பயன்படுத்தினார்கள்.

அதன் மூலம் அந்த அரசர்களுக்குத் தெரிந்த உண்மையையும் மனமாற்றத்தையும் பெறவும் இது (மது) ஒரு உந்துசக்தியாகக் காணப்பட்டது.

திரைப்படங்களில் கூட முதல் தொடக்கத்தில் புகைபிடிப்பதும் மது அருந்துவதும் உடல்நலத் துக்கு தீங்கு என்றும் மது வீட்டுக்கும் நாட் டுக்கும் உயிருக்கும் கேடு எனவும் குறிப்பிடுவார்கள். மதுவைத் தற்காலத்தில் தெரியாத மனிதர்கள் எவருமிலர்.

எல்லோருக்கும் மது என்றவுடனே ஆங்கிலத்தில் பியர் என்ற சொல் ஞாபகத்திற்கு வரும். மதுக்கடை களைக் காண முடியாத இடமே இல்லை என்று சொல்லலாம்.இதன் பால் ஈர்க்கப்பட்டவர்களில் இளை ஞர்கள் கூட்டமே அதிகரித்து வருகிறது.

madhu 4

இவர்கள் வீதிக்கு வீதி நின்று மதுவை அருந்தி அங்குவரும் இளம் பெண்களுக்கும் மற்றும் அந்த வீதியால் வரும் வேறு ஆட் களுக்கும் இடையூறாகவும் குழப்பம் விளை விக்கும் தன்மையைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். இன்னும் ஒருசிலர் வீட்டில் தம் தாய் தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்து அதனை வீணாக மதுவுக்கும் புகை யிலைக்கும் செலவிடுகின்றனர்.

இந்தக் காலத்தில் மனிதனை அடிமையாக்க மது ஒரு உந்து கோலாக உள்ளது.ஒரு மனிதனுக்கு நோயை உண்டு பண்ணவும் மது ஒரு காரணமாகும். புற்று நோய், நுரையீரல் நோய்கள் என்பன ஏற்படுகின்றது. மது இரத்த அழுத்தத்தையும் உண்டுபண்ணும். குடிக்கும் ஒவ்வொரு துளியும் எமக்கு நாமே கொள்ளியைப் போடு வது போலத்தான் உள்ளது.

இன்றைய கால இளைஞர்களின் அடாவடித்தனமான அனைத்திற்கும் காரணமாக மதுவும் இருக் கிறது. ஒருவிளையாட்டுப் போட்டியில் இரு குழுக்கள் மோதி விளையாடுகின்றனர். அந்த விளையாட்டில் சிறுகுழப்பம் என்றால் போதும். மதுபானத்தைக்குடித்து மதுபானப் போத் தலை உடைத்து தமக்குள் தாமே குத்துப்பட்டு வெட்டுப்பட்டு அழிகின்றனர்.

இவ்வளவு அதி பயங்கரவேகத்தில் மதுவின் ஆதிக்கம் தொடர்வதால் இனிவரும் சந்ததிகளைக் காப்பாற்றப் போவதற்கு எவருமிலர். போதையின் ஆட்சியால் தீயவை நிகழ் கின்றன. இனிவரும் காலமாவது மதுவை அழித்து உலகத்து மனிதர்களுக்கு விடிவைக் கொடுக்க வேண்டும்.

 

The post appeared first on Akuranatoday.com