Monday , May 1 2017

தமது பலத்தை இரண்டாவது முறையாகவும் நிரூபித்த மத்தளே, தோமஸ் அணி

Thomas big match Hockey

புனித தாமஸ் கல்லூரி, மத்தளே தொடர்ந்தும், எரிக் ஹுலன்கமுவ கிண்ணத்தை 2ம் முறையாகவும் தம் வசப்படுத்தி புனித தாமஸ் கல்லூரி, கல்கிஸ்ஸ அணியை 1-0 கோல் கணக்கில் வெற்றியூட்டியது.

கடந்தாண்டும் 2-0 கணக்கில்புனித தாமஸ் கல்லூரி, மத்தளே வெற்றிக்கொண்டிருந்த நிலையில் நேற்று, மாலை கொழும்பு ஆஸ்ட்ரோ ஹாக்கி காம்ப்ளக்ஸ்சில் நடைபெற்ற 19குட்பட்ட முன்னாள் தேசிய ஹாக்கி வீரர் எரிக் ஹுலன்கமுவ ஞாபககார்த்த கிண்ணப்போட்டியில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், புனித தோமஸ் கல்லூரி, மத்தளே அணியும் புனித தாமஸ் கல்லூரி கல்கிஸ்ஸ அணியும் மோதிக்கொண்டன.

புனித தாமஸ் கல்லூரி, கல்கிஸ்ஸ அணியின், முன்வரிசை ஆட்டக்காரரான நாலபெரும இம்முறை வெற்றி பெறும் நோக்கில் மேற்றுக்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. போட்டியின் முதல் பாதியில் கடைசி நிமிடங்களில், இடப்பக்கப் முன்வரிசை வீரர்களால் D வட்டத்துக்குள் குறுக்காக உள் செலுத்திய பந்தை திசைதிருப்பி கோலாக மாற்றிக்கொண்டனர்.

முதல் கோலை பெற்றுக்கொண்ட உத்திவேகத்தில், போட்டியின் இரண்டாம் பாதியில் மிகவும் லாவகமாக புனித தாமஸ் கல்லூரி, மத்தளே விளையாடியது பார்வையாளர்களை வசீகரித்தது. புனித தோமஸ் கல்கிஸ்ஸ அணிக்கு நான்கு பெனால்டி கோனர்கள் கிடைத்தாலும், வாய்ப்புக்களை பயன்படுத்த தவறியது துரதிர்ஷ்டமே.

இறுதிப்பாதியில், இரு அணிகளாலும் எவ்விதமான கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டியின் முடிவில் 1-0 கணக்கில் புனித தோமஸ் கல்லூரி, மத்தளே அணி வெற்றி பெற்றது. போட்டியின் சிறந்த வீரராக மத்தளே அணியை சேர்ந்த T.C.S. பண்டார, நடுவர் குழுவால் தெரிவு செய்யப்பட்டார்.

அதே நேரம் 15 வயதுகுட்பட்ட ஹாக்கி போட்டியில், இரு அணிகளும் எவ்விதமான கோல்களை பெறாமல் 0-0 கணக்கில் போட்டி சமநிலையில் முடிவுற்றது குறிப்பிபிடத் தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

(function(d, s, id) {
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) return;
js = d.createElement(s); js.id = id;
js.src = “//connect.facebook.net/en-US/all.js#xfbml=1”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, “script”, “facebook-jssdk”));

The post தமது பலத்தை இரண்டாவது முறையாகவும் நிரூபித்த மத்தளே, தோமஸ் அணி appeared first on ThePapare.com.