Friday , November 24 2017

பச்சை குத்துபவர்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்!


இலங்கை முழுவதும் வேகமாக பிரபலமடைந்து வரும் பச்சை குத்தும் நடவடிக்கைகளுக்கு ஒழுங்கு விதிமுறைகள் இல்லாமையினால் முக்கிய சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார சங்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரையில் அதிகமானோர் இந்த தொழில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் அதிகமான வாடிக்கையாளர்களை இந்த சேவையை பெற்றுக்கொள்ள வருகின்றனர்.

அத்துடன் சேவை வழங்குபவரிடம் இருந்து சில நோய் தொற்றுகள் சேவை பெறுபவர்களுக்கு தொற்றும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுகாதார அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு பச்சை குத்துவதில் ஒழுங்கு முறை மேற்கொள்வதற்காக உரிய சட்டம் மற்றும் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த முறை நாட்டினுள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பொது சுகாதார சங்க ஆய்வாளர்களிடம் உள்ள அதகாரங்களினால் இந்த துறைக்கான நடவடிக்கை மேற்கொள்ள அல்லது கட்டுப்படுத்த முடியதென அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பச்சை குத்துவதென்பது நீண்ட வரலாற்றை கொண்ட ஒரு தொழிலாகும் நீண்ட காலமாக அதில் பெரிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இது தற்போது வரையில் அழகு கலையாக மாறியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

The post appeared first on Akuranatoday.com