Monday , May 1 2017

19 வயதுக்குட்பட்ட 2016/17 சிங்கர் கிண்ணப்போட்டிகளில் 2 சதங்கள்

Singer Trophy U19 division 1

2016/17 ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணப் போட்டிகளுக்காக இம்முறை அகில இலங்கை மட்டத்தில் 48 பாடசாலை அணிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்காக பங்கேற்றுகின்றனர்.

அந்த வகையில் இப்போட்டிச்சுற்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவு(டிவிசன்) 1 க்காக 28 பாடசாலை அணிகளும், பிரிவு(டிவிசன்) 2க்கு 16 பாடசாலை அணிகளும் மற்றும் பிரிவு(டிவிசன்) 3காக 4 பாடசாலை அணிகளுமாக, மொத்தம் 48 பாடசாலை அணிகள் கலந்து கொள்கின்றன. இப்பிரிவுகளில் முன்னிலைப்படும் 16 பாடசாலை அணிகள் 20இருபது போட்டித்தொடருக்கு தெரிவு செய்யப்படும்.

அந்த வகையில் இன்று 4 போட்டிகள் இடம் பெற்றன, பின்வருமாறு:

DS சேனாநாயக்க கல்லூரி எதிர் புனித திருத்துவ கல்லூரி
ஜனாதிபதி கல்லூரி எதிர் மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித தோமஸ் கல்லூரி
புனித சில்வெஸ்டர் கல்லூரி எதிர் அனுராதபுர மத்திய கல்லூரி


DS சேனாநாயக்க கல்லூரி எதிர் புனித திருத்துவ கல்லூரி

ப்ளூம் பீல்ட் மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்றசியில் வெற்றிபெற்ற புனித திரித்துவ கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது. தொடர்ந்து களம் இறங்கிய DS சேனாநாயக்க கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓவருக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. DS சேனாநாயக்க கல்லூரிக்காக தசுன் டெமஷ 62, ஷேஷாட் அமீன் 39 மற்றும் மெத்சித் ஜெயமந்த 34 கூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் சாம்முகநாதன் சனோகீத் 32/3, விமுக்தி நேத்மால் 35/3 மற்றும் ஸீப் 24/2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

அடுத்து களம் இறங்கிய புனித திருத்துவ கல்லூரி முதல் நாள் ஆட்ட முடிவில் 32 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அதிகூடிய ஓட்டங்களாக கலன டீ சொய்சா 23, ஹசித்த பாயாகோட 18 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட பசின்ந்து ஆதித்யா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டி தொடர்ந்து நாளை இடம்பெறும்.


ஜனாதிபதி கல்லூரி எதிர் மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி

இப்பாடசாலைகளுக்கிடையிலான போட்டி, கொழும்பு சர்ரே விலேஜ் மைதானத்தில் இடம் பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரியும் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதனை தொடர்ந்து துடுப்பாட களம் இறங்கிய ஜனாதிபதி கல்லூரி 61.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று கொண்டது. ஹிருன டில்ஷான் 57, மலக்கா டீ சில்வா 46 மற்றும் ஷாலக்க பண்டார 31 கூடியஓட்டங்கங்களாக பெற்று கொண்டனர். சிறந்த முறையில் பந்து வீசிய சன்க்க பூர்ண்ண 54/5யும் P. லசித்த 21/2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களம் இறங்கிய மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆட்ட நேர முடிவில் சிறப்பாக துடுப்பாடி 31 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பிற்கு122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்டமிழக்காமல் துஷான் குருகெ 74 ஓட்டங்களையும் ஷெஹான் மனீஷ 31 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர். யோஹான் லியனகே 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித தோமஸ் கல்லூரி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. சிறப்பாக துடுப்பாடிய டிலங்க்க மதுரங்க 143 ஓட்டங்களை விளாசினார். திலான் நிமேஷ் 42 ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். 65ம் ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களை பெற்றிருந்த வேலையில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி ஆட்டத்தினை இடை நிறுத்திக்கொண்டது. டெஹான் ஸ்சாப்ட்டர் 34/2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து களம் இறங்கிய புனித தோமஸ் கல்லூரி, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 25ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது. சிறப்பாக பந்து வீசிய அவிந்து பெர்னாண்டோ 15/2 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்


புனித சில்வெஸ்டர் கல்லூரி எதிர் அனுராதபுர மத்திய கல்லூரி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அனுராதபுர மத்திய கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி 65 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்தியது. சிறப்பாக துடுப்பாடிய மஞ்சித் ராஜபக்ச ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களையும், அவிந்து ஹேரத் 94 ஓட்டங்களை புனித சில்வெஸ்டர் கல்லூரி பெற்றுகொண்டனர். பந்து வீச்சில் இசுறு அனுராத 49/3, மதுரங்க சந்துவாரத்னே 94/2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களம் இறங்கிய அனுராதபுர மத்திய கல்லூரி, மிகவும் மோசமான துடுப்பாட்டத்தால், 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அனுராதபுர மத்திய கல்லூரிகாக டில்ஷான் மாத்திரமே ஆகக்கூடிய 29 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். தனது சிறப்பான பந்து வீச்சில் தூஷித் டீ சில்வா 26/4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடன், மஞ்சுள பெரேரா 15/3 விக்கெட்டுகளையும், உசிந்து 6/2 விக்கெட்டுகளையும் தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.

(function(d, s, id) {
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) return;
js = d.createElement(s); js.id = id;
js.src = “//connect.facebook.net/en-US/all.js#xfbml=1”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, “script”, “facebook-jssdk”));

The post 19 வயதுக்குட்பட்ட 2016/17 சிங்கர் கிண்ணப்போட்டிகளில் 2 சதங்கள் appeared first on ThePapare.com.