Sunday , October 22 2017
Breaking News

அரசாங்கம் தேரர்களை சிறையில் அடைக்கின்றது.. பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்கின்றது.

அரசாங்கம் தேரர்களை சிறையில் அடைக்கின்றது.. பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்கின்றது.
(மொஹொமட் ஆஸிக்)

மக்களின் வாழும் உரிமையை பரித்துள்ள அரசு அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கு மக்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் பரித்துள்ளதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன்னியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டி நுகவலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த் அவர் இவ்வாறும் கூறுனார்.

ஹம்பாந்தோட்டையில் நிறுவப்பட்ட மத்தல விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற வற்றை அங்கு நிர்மானிப்பதற்கு அங்குள்ள மக்கள் விருப்பம் தெரிவித்த்து அதன் இலாபங்கள் தமக்கும் கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கையில் ஆகும்.

இருந்த போதும் தற்போது அவை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு அரசு முயற்சி எடுப்பதை அறிந்த மக்கள் அமைதியான எதிர்புப ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.

அதன் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உற்பட பலர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து தெளிவாவது தற்போதைய நல்லாட்சி அரசு மக்களுக்கு வாழும் சுதந்திரத்தை இல்லாமலாக்கியது போன்று அமைதியான எதிர்ப்புகளை முன்னெடுக்க இருந்த உரிமையையும் இல்லாமலாக்கி உள்ளதாகும்..

நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டோரே கைது செய்தது ஆர்ப்பாட்ட காரர்களுள் எவரோ எரிந்த கல்லால் பொலிஸ் வாகனங்கள் சேதமடைந்த்தாக கூறியே ஆகும்.

கடந்த காலங்களில் மத்தளை விமான நிலைத்தில் 18,000 ம் மெட்ரிக் டன் நெல்லை கலஞ்சியப்படுத்தியதன் காரணமாக விமான நிலையத்தின் இயந்திரங்களுக்கு ஏற்பட்ட பல கோடி ரூபாய் நட்டத்திற்கு யாரை தண்டிப்பது?

அதே போன்று 38 ரூபாவிற்கு கொல்வனவு செய்த 18,000 டன் நெல்லை 12 ரூபா வீதம் மதுபானம் தயாரிப்பதற்கு விற்பணை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது அரசு இவற்றுக்கு மெளனம் சாதிக்கின்றது

அரசாங்கம் சிபாரிசு செய்பவர்களை சிறையில் அடைப்பதில்லை எனபதற்காக முன்னால் நீதி அமைச்சரை பதவியில் இருந்து விளக்கி விட்டனர்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள நீதி அமைச்சு அரசின் இலக்கை மிக வேகமாக செய்து வருகின்றார்.

தேரர்களை சிறையில் அடைக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்கின்றார். என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.