Sunday , October 22 2017
Breaking News

பலராலும் எதிர்பார்க்கப்படும் கண்டி – கொழும்பு ‘ஹை வே’ .. பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

பலராலும் எதிர்பார்க்கப்படும் கண்டி - கொழும்பு 'ஹை வே' .. பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய நெடுஞ்சாலையை, கலகெதர வரை நிர்மாணித்து அங்கிருந்து கண்டிவரை வளைவுகளுடன் கூடியதாக நான்கு வழிப்பாதை ஒன்றை அமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மத்திய நெடுஞ்சாலை தொடர்பில் அமைச்சரவையில் சூடான வாதம் நடைபெற்றதோடு கல கெதரவுக்கும், கண்டிக்கும் இடையில் சுரங்கப் பாதை அமைப்பதால் ஒரு கிலோ மீட்டருக்கு 5 பில்லியன் ரூபாவரை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

மத்திய நெடுஞ்சாலை தொடர்பில் நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேக்கர வுக்குமிடையில் சூடான வாதம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக நேற்று(11) நடை பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சரவையில் வாதப்பிரதி வாதங்கள் நடப்பது வழமையானது. கண்டிக்கான நெடுஞ்சாலை தொடர்பில் 2002 முதல் பேசப்பட்டு வருகிறது.

அன்று ஜ.தே.க அரசு முன்னெடுத்த திட்டமிடப்பட்ட நெடுஞ்சாலை திட்டத்தை அடுத்து வந்த அராசங்கம் இடைநிறுத்தியது. அன்று திட்டமிட்டவாறு அதனை செய்திருந்தால் தற்பொழுது மதிப்பிட்ட செலவை விட 10 இல் ஒரு மடங்கே செலவாகியிருக்கும்.

இந்த பாதை கண்டி வரை அமைக்கப்படும்.ஆனால் கலகெதரவுக்கு அப்பால் நீண்ட சுரங்கப்பாதை அமைக்க வேண்டியுள்ளது.

இதனால் பாரிய செலவு ஏற்படுவதால் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கைவி டப்பட்டுள்ளது.

அதற்கு மாற்றீடாக கலகெதரவில் இருந்து நான்கு வழிப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஒப்பந்தம் செய்துள்ள “மிட்சு” கம்பனியுடன் வேறு ஒரு கம்பனியையும் இணைத்து கூட்டுத் திட்டமாக இதனை முன்னெடுக்க ஜப்பான் யோசனை முன்வைத் துள்ளது. அதற்கு எமது எதிர்ப்பு கிடையாது.

இதே வேளை கண்டி வரை இந்த பாதை அமைப்பது தொடர்பில் மேலும் யோசனைகள் இருந்தால் அதை முன்வைக்க அமைச் சர்களுக்கு ஜனாதிபதி அவகாசம் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் கயந்த கருணாதிலக கருத்து வெளரியிடுகையில், இதற்கான காணி சுவீகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.