Sunday , October 22 2017
Breaking News

கஃபாவில் அருகில் இரத்தம் –  கேள்விப்படுபவைகளை எல்லாம் பரப்பாதீர்கள்

கேள்வி படுபவைகளை எல்லாம் நம்பி அதை மற்றவர்களிடம் பரப்பி பொய்யனாக ஆகாதீர்கள்:

புனித கஃபாவில் அருகில் பூமியிலிருந்து இரத்தம் வெளிவருகிறது என்றும் இறைவனின் முன்னெச்சரிக்கை என்றும் கூறி ஒரு வீடியோவும், உருது மொழி ஆடியோவும் வேகமாக வாட்சப்பில் பரவிவருகிறது.

இதன் உண்மை என்ன.??
உண்மை என்ன வெனில் கஃபத்துல்லாவின் அருகில் தரையிலிருந்து இரத்தம் கொப்பளிக்கிறது என்பது தவறான தகவல்.

புனித கஃபாவிற்கு தினம் தினம் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் வருகின்றனர். இதில் நோயாளிகள், உடல் காயத்தில் கட்டு போட்டிருக்கும் நோயாளிகள் போன்ற பல தரப்பினரும் தவாப் செய்ய ஆவலில் வருவார்கள். கூட்ட நெரிசல் காரணமாக ஒரு யாத்திரிகருக்கு ஏதோ ஒரு சூழலில் காயம் ஏற்பட்டு அதன் இரத்தம் தான் வடிந்திருக்கிறது. அதுவும் கஃபாவிற்கு சுற்றியும் உயர்தர பளிங்கு கற்கள் என்பதால் சிறு இரத்தம் வழிந்து ஓடுவது கூட தெளிவாக தெரியும். இதை யாரோ எவரோ படம் எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்திருப்பார்கள்.

அந்த படத்தை ஷியாக்கள் எடுத்து மொகரம் மாதம் என்பதால் தங்களின் வழிக்கெட்ட கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் விதத்தில் ஒரு உருது மொழியில் ஆடியோவை பேசி அனுப்பியிருக்கிறார். அதில் மொகரம் மாதம் என்பதால் நபிகளாரின் பேரன் உசைன் (ரலி) கொல்லப்பட்ட தினத்தில் இப்படி கஃபாவிலிருந்து இரத்தம் வருகிறது என்று கிறுக்கு தனமாக ஒரு கட்டுகதையை கட்டி உண்மை போல ஷியாக்கள் பரப்பியுள்ளனர்.

அதை தமிழ் பேசும் முஸ்லிம்களில் சிலர் கொஞ்சம் கூட சுயபுத்தி இல்லாமல் தமிழில் ஆடியோவாக பேசி புரிளியை வலுபடுத்துகின்றனர். அதை சமுகவலைதளங்களில் வரும் எந்த செய்தியையும் உண்மை என நம்பும் சுய அறிவு கொஞ்சம் கூட இல்லாத கூட்டங்கள் உண்மை என நம்பி பலருக்கும் பகிருகிறார்கள்.

கஃபத்துல்லாஹ் அருகில் இரத்தம் வருவது பற்றி வரும் செய்தி பொய்யானது. என்று ஹெல்ஃப் நியூஸ் பத்திரிக்கையில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
http://m.gulfnews.com/…/splattered-blood-near-kaaba-what-sa…

சகோதரர்களே..
உண்மையென தெளிவாக தெரியாத எந்த ஒரு செய்தியையும் பரப்பாதீர்கள்.
“ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம்(பிறருக்கு)அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா(ரலி) நூல் : முஸ்லிம் – 6

இப்படி பொய்களையும், வதந்திகளையும் பரப்புவர்களின் அளவு கோல் என்ன என்பதை அழகான முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை படியுங்கள், சிந்தியுங்கள்

கஃபாவில் அருகில் இரத்தம் -  கேள்விப்படுபவைகளை எல்லாம் பரப்பாதீர்கள்