Sunday , October 22 2017
Breaking News

காம்போ மாத்திரைகளில் கவனம் –  Risky Drug Combinations

நோய் குணமாகத்தான் மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறோம். ஆனால், `ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நோய்களைக் குணமாக்கும் மாத்திரைகளைச் சாப்பிட்டால், நோய்க்குத் தீர்வு கிடைக்காமல் வேறு பிரச்னைக்கு வழிவகுத்துவிடும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இதனால்தான் மருத்துவர்கள் மாத்திரைகளைப் பரிந்துரைக்கும்போது, ‘வேறு ஏதாவது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறீர்களா?’ என்று விசாரிப்பார்கள்.

சில மாத்திரைகளுடன் மற்ற நோய்க்கான மாத்திரைகளைச் சேர்த்து உட்கொள்ளக் கூடாது. அப்படிச் சில முக்கியமான  மாத்திரைகளையும், அவற்றுடன் சேர்த்து உட்கொள்ளக்  கூடாத  மாத்திரைகள் என்னென்ன,  அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பதையும் தெரிந்துகொள்வோம்.

காம்போ – 1

ரத்தப்போக்கைக்  கட்டுப்படுத்துவதற்காக, வார்ஃபரின் (Warfarin), ஆன்டிபிளேட்லெட்ஸ் (Antiplatelets) போன்ற மருந்துகளுடன் ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணி மருந்துகள், ஸ்டீராய்டுகள் அல்லாத அலெர்ஜிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal Anti-Inflammatory Drug- NSAID) மற்றும் மஞ்சள், மீன் எண்ணெய் போன்ற சப்ளிமென்ட்டுகளையும் உட்கொள்ளக் கூடாது.

பாதிப்பு: இது ரத்தப்போக்கைக் கட்டுப்படுத் தாது. மாறாக, ரத்தப்போக்கை அதிகரிக்கச்செய்யும்.

காம்போ – 2

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை உட்கொள்ளும்போது, ஆஸ்பிரின், நாப்ரோக்ஸென் (Naproxen), இபுப்ரோஃபென் (Ibuprofen) போன்ற மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.

பாதிப்பு: இந்த இரண்டு வகையான மாத்திரை களும் சிறுநீரகத்தைப் பாதிக்கக் கூடியவை. இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும்போது, இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

காம்போ – 3

விகோடின் (Vicodin) அல்லது பெர்கோசெட் (Percocet) போன்ற  வலிநிவாரணி மாத்திரைகளுடன், அசிட்டமினோபேன் (Acetaminophen) போன்ற சளி, இருமலுக்காக உட்கொள்ளும் மாத்திரகளைச் சாப்பிடக் கூடாது.

பாதிப்பு: வலி நிவாரணிகளிலும் அதே அசிட்டமினோபேன் உள்ளதால், இதன் அளவு அதிகரித்துக் கல்லீரலில் பாதிப்பை உண்டாக்கும்.

காம்போ – 4

வலி நிவாரணிகள் அல்லது மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைப்பதற்காக உட்கொள்ளும் மருந்துகளுடன் ஆன்டிஹிஸ்ட்டமின்ஸ் (Antihistamines), டைபேன்ஹைட்ரமைன் (Diphenhydramine) போன்ற அலெர்ஜிக்கான மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

பாதிப்பு: அதிக தூக்கத்தைத் தரும்.

காம்போ – 5

புற்றுநோய்க்காக எடுத்துக்கொள்ளும் கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சையின்போது, வைட்டமின் சி மற்றும் இ போன்ற அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்டு்கள் உள்ள சப்ளிமென்ட்டுகளை  உட்கொள்ளக் கூடாது.

பாதிப்புகள்: இவை புற்றுநோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும்.


கவனம்

இரண்டு வெவ்வேறு நோய்களுக்கு ஒரே சமயத்தில் மாத்திரைகள் சாப்பிடவேண்டியிருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி, அவர் சொல்கிற இடைவெளிகளில் சாப்பிடலாம்.


டாக்டர் விகடன் – 2017-08-16