Thursday , September 21 2017

இது சிங்கள பௌத்த நாடு இங்கு நாய்களை கொல்லுவதற்கு அனுமதிக்க முடியாது ! 


இது சிங்கள பௌத்த நாடு இங்கு நாய்களை கொல்லுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும் நாய்களை கொல்லுவது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல என அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.

இதே நேரம் பல்கலைக்கழகத்தினுள் இருந்த நாய்களை அடையாளந் தெரியாத சிலர் கொலை செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நாய்களின் காணொளிகளும் நிழற்படங்களும் சமுக வலை தளங்களூடாக இந்நாட்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தனக்கும் அறியக் கிடைத்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் மாணவர்களைப் போன்று மிருகங்கள் தொடர்பில் கரிசணைக் காட்டும் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Originally posted by Madawelanews