Wednesday , July 26 2017

சுதந்திர கூட்டமைப்பில் இருந்து 9 கட்சிகள் விலக தீர்மானம் ! 

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியிட்டுள்ள நிலையில் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் பலவுன் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள 9 கூட்டணி கட்சிகள் அக்கூட்டமைப்பில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணியில் அரசாங்கத்துடன் உள்ள அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் இவர்கள் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அக்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில்களில் இக்கட்சிகள் 9 உம் பொ.ஐ.முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட போதிலும், இக்கட்சிகளின் தேவைகள் குறித்து முன்னணி கவனம் செலுத்தாமையினால் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Originally posted by Madawelanews