Thursday , September 21 2017

எமது இலட்சியம்! நீங்களும் முயற்சிக்கலாம்.! இன்ஷா அல்லாஹ்

என் நண்பனின் இலட்சியம் ; எமது இலட்சியம்!
நீங்களும் முயற்சிக்கலாம்.!
இன்ஷா அல்லாஹ்
——————————————–

இவர் எனது அன்பு மகன் முஸ்அப் இப்போது எனது மகனுக்கு ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமாகும்.
அல்லாஹ் எமக்கு இந்த அன்பளிப்பை தருவதற்கு முன் இருந்தே எமது ஆசை எமக்கு ஒரு குழந்தை கிடைத்தால் அக்குழந்தையை குறைந்தது மூன்று
நான்கு வயதுக்குள் அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் ஆக ஆக்க வேண்டும் என்பதாகும்.

அல்லாஹ்வின் உதவியால் எனது மனைவி குழந்தையை கருவில் சுமந்தது முதல் இன்று வரை அதிகமாக அல் குர்ஆனை அதே எண்ணத்தோடு ஓதி வருகின்றாள்.

இப்போதைக்கு பல வேலைகளுக்கு மத்தியில் முப்பதற்க்கும் மேற்பட்ட முறை குர்ஆனை ஓதி முடித்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்..

குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்உ மகனை கைய்யில் வைத்துக் கொண்டு அவர் செவிமடுக்கும் விதம் அல் குர்ஆனை ஓதுவா.. இப்போதைக்கு இருபத்தி ஐந்து முறைக்கு மேல் முழு குர்ஆனையும் எனது மகன் கேட்டு முடித்து விட்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

இன்று கிராத் கேட்பதே எமது குழந்தைக்கு மிக விருப்பமான காரியமாக மாறி விட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

எமது ஆசை நிறைவேற பிரார்த்தனை செய்யுங்கள்.

குறிப்பு:
இப்பதிவின் நோக்கம் நாம் இரகசியமாக செய்யும் நல்லமலை வெளிக்கொண்டுவருது கிடையாது.

இன்று பிறந்த குழந்தை அழுதாள் கூட குழந்தையின் அழுகையை அடக்க தாய்மார்கள் தங்களின் கையில் தவலும் தொலைபேசிகளில் உள்ள இசைகளை போட்டு குழந்தையை செவிமடுக்க வைப்பார்கள் இத்தகைய நிலமைகள் மாற வேண்டும்.

இன்னும் குழந்தைகளை தூங்க வைக்கும் போதும் குழந்தைகள் பால் அருந்தும் போதும் சினிமா பாடல்களை பாடுவதையும் , மூட நம்பிக்கை சார்ந்த அர்த்தமற்ற கதைகளை சொல்லுவதையும் தவிர்த்து அல் குர்ஆனை ஓதி அதை கேட்டபடி பால் அறுந்த செய்ய மற்றும் தூங்க வைக்க, முயற்சிக்க வேண்டும்

குழந்தை பருவம் முதல் ஆடல் பாடல்களை ரசிக்காமல் அல் குர்ஆனின் இனிமையை ரசிக்கும் குழந்தைகளாக எம் குழந்தைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு விடயத்தையும் துல்லியமாக பார்த்து நினைவில் பதிவு செய்து கொள்ளும் எம் குழந்தைகளுக்கு எம்மை படைத்த இறைவனின் வார்த்தைகளை கேட்டு மனனம் செய்து கொள்ளவது கடினமான காரியம் கிடையாது இதை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோர்களும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

எல்லாம் வல்ல இறைவன் எம் காரியங்களை பொருந்திக் கொண்டு நல்ல பயன்களை தர வேண்டும்.

இவன்
அபூ முஸ்அப் உமரீ