Thursday , June 29 2017
Breaking News

தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவியின் மரணத்தில் கிளம்பியுள்ள சந்தேகங்கள்.


கடந்த 14 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் கொட்டாவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவியின் மரணம் தொடர்பில் நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரித்து வருகிறது.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதக அவரது தந்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை களுபோவில மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

சடலத்தை பரிசோதித்த போது உடலில் விஷம் இருப்பதாகவோ, அல்லது கழுத்து நெரிக்கப்பட்டு கழுதெழும்பு உடைப்பட்டதாகவோ எவ்வித அடையாளங்களும் தென்படவில்லை என அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, மருத்துவர் சாலிக்கா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் சடலத்தின் பாகங்கள் இரசாயண பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவியை முன்பே கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் உடல் போடப்பட்டு, காவற்துறையினரை திசை திருப்பு குற்றவாளியொருவர் முற்பட்டிருந்தால் இந்த இரசாயண பரிசோதனையின் பின்னர் உண்மை தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மாணவியின் காதணியொன்றும் காணாமல் போயுள்ளதாக அவரின் தந்தை, சட்ட மருத்துவ அதிகாரியிடம் கூறியுள்ளார்.

உயிரிழந்துள்ள மாணவியின் கையடக்க தொலைபேசி செயற்பாட்டில் உள்ள நிலையில், அதன் மூலமும் விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Originally posted by Madawelanews