Monday , November 20 2017

இப்தாருக்கு ஆள் பிடிக்கும் போட்டி,

-Mohamed Naushad-

பொது பல சேனாவின் பல உறுப்பினர்கள் (ஞானசூனியத்தை தவிர) தொடர்ந்து சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. ஏன் இந்த திடீர் நடவடிக்கை என்று யோசித்துப் பார்த்தால் அதுவும் ஒருவகை ஏமாற்று வித்தை என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமம் அல்ல.

அரசியல் தலைவர்களைப் பொறுத்தளவில் இப்தாரும் இன்னொரு மேதினமாகிவிட்டது. யாருடைய இப்தாருக்கு அதிகளவு முஸ்லிம்கள் வந்தார்கள் என்பது தான் பிரதான கேள்வி.

முன்னாள் ஜனாதிபதி முந்திக்கொண்டு இப்தார் நடத்தி உள்ளார். இதில் நோன்பு காலத்து உள்ளூர் இராப்பிச்சை கூட்டத்துக்கு மேலதிகமாக இந்த நாட்டில் உள்ள மத்திய கிழக்கு ராஜதந்திர இராப்பிச்சைகளும் பங்கேற்றுள்ளனர்.இது முன்னாள் தலைவருக்கு கிடைத்துள்ள வெற்றி.

இந்த நிகழ்வில் சமூக வாஞ்ஞையோடு ஊடகங்களில் தோன்றி கண்ணீர் சிந்தும் சிரேஷ்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களும் இவர்களோடு சேர்த்து சமூக அரங்கில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

மிகவும் சாதுர்யமாக கமரா லென்சுகளுக்குள் சிக்காமல் இவர்கள் தப்பிக்கொண்டுள்ளனர். அதுதான் இவர்களது நயவஞ்சகத்தின் உச்சகட்டம்.

இனி விடயம் என்னவென்றால் அடுத்து தான் நடத்தவுள்ள இப்தார் மேதினத்துக்கு இதை விட அதிகமான திண்ணி பண்டாரங்களை வரவழைக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு இன்றைய ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்.

அதற்காகத் தான் பொது பல சேனாவுக்கு எதிரான இந்த அவசர அதிரடி சுற்றிவளைப்பு கைதுகள். இது இப்தார் மேதினத்துக்கு ஆள் சேர்க்கும் ஒரு தந்திரமே தவிர நிரந்தரமான ஒரு செயற்பாடல்ல. இப்தார் மேதினம் முடிந்த அடுத்த நாளே அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.