Friday , May 26 2017

(வீடியோ) முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு.

அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு மேற்கொண்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

பல்வேறு வழிகள் மூலம் செயற்படுத்தும் இனவாத மற்றும் அடிப்படைவாத குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகளினால்  பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

– தகவல் : ரிப்தி அலி – விடியல் –

Originally posted by Madawelanews