Friday , May 26 2017

கட்டுகஸ்தொட்டையில் நிர்மாணிக்கப்படும் 17 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற 17 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ராஜாங்கனய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Originally posted by Madawelanews