Saturday , April 29 2017

அது எமது பூமி ! ஜனாதிபதியின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லவுள்ளோம் ;கிரிந்திவல சோமரதன தேரர்

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணி­களை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை நேற்று வியா­ழக்­கி­ழமை பௌத்த பிக்­குகள் மேற்­கொண்­டிருந்த நிலையில் இன்றும் அப்பகுதிக்கு தேரர்கள் சென்றதால் பதட்டம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த பிரதேசம் தீகவாபிக்கு சொந்தமான இடம் எனவும் அங்கிருந்த விகாரை யுத்தத்தினால் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அங்கு முஸ்லிம்கள் குடியேறியுள்ளதாகவும் வடக்கு கிழக்கு  மாகாண பிரிவனா கல்வி பிரிவின் தலைவரும் புலுக்குனாவ ரஜமஹா விகாரையின் பிரதம தேரரும் அரந்தலாவ பௌத்த நிலையத்தின் பிரதம தேரருமான கிரிந்திவல சோமரதன தேரர் குறிப்ப்பிட்டுள்ளார்.

இங்கு விகாரை அமைக்க ஜனாதிபதி மற்றும் தொல்பொருள் திணைக்களம், காணி அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தாங்கள் அனுமதி பெறவுள்ளதாக கிரிந்திவல சோமரதன தேரர் குறிப்ப்பிட்டுள்ளார்.

Originally posted by Madawelanews