Monday , November 20 2017

யுத்தத்தில் பிசியாக இருந்ததால்தான் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியாமல் போனது.

யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – ஶ்ரீ மகா விஹாரைக்கு வழிபாடுகளில ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக் காலத்தின் இறுதியில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.