Monday , November 20 2017

ஶ்ரீ ஜெயபோதி விஹாரைக்கு சிலர் தீ மூட்டிவிட்டு தப்பியோடிய விஷமிகளை தேடி பொலிஸ் வலை வீச்சு..

ஹம்பாந்தோட்டை – சிரிபோபுர ஶ்ரீ ஜெயபோதி விஹாரையில் சிலர் தீ மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, தெரியவந்துள்ளது.

அந்த விஹாரையின் விஹாராதிபதி இதுகுறித்து ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இன்று காலை முச்சக்கர வண்டியில் வந்த இவர்கள் வண்டியை விஹாரைக்கு முன் நிறுத்தியுள்ளனர்.

பின்னர் அதிலிருந்த ஒருவர் விஹாரைக்குள் சென்று தானசாலை பகுதியில் தீவைத்து விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தீ அதிகமாக பரவு முன் அதனை அனைத்து விட்டதால் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Originally posted by Madawelanews