Friday , May 26 2017

ஜப்பானில் உயிரிழந்த ( உக்குவளை) வாரகாமுற முகம்மத் ஜிசானின் நல்லடக்கம் இன்று இடம்பெற்றது.


கடந்த திங்கள்கிழமை,  ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை (உக்குவளை) வாரகாமுற பகுதியை சேர்ந்த முகம்மத் ஜிசானின் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யபட்டது.

இன்று லுஹர் தொழுகையை அடுத்து யோக்கொஹாமா எபீனா பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அங்கிருந்து யமனாசி முஸ்லிம் மையவாடியில் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜப்பான் வாழ் எராளமான ( சுமார் 600 பேர்) கலந்து கொண்ட ஜனாஸா நல்லடக்கத்தை அடுத்து மரணித்தவரின் குடும்பத்தினருக்கு பலரும் நிதி உதவிகளை செய்துள்ளனர்.

குறுகிய காலத்தில் ஜப்பானின் பல்வேறு மனிதர்களுடன் வபாத்தான நபர் பழகி நன்மதிப்பை பெற்ற ஒருவர் எனவும், அங்குள்ள முக்கிய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு துஆ செய்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக .

– வசீம் மடவளை ( ஜப்பான்)

Originally posted by Madawelanews