Tuesday , June 27 2017
Breaking News

கண்டி – ஸ்கேன் செய்யவந்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த பரபரப்பு சம்பவம்

நோய் நிலைமை காரணமாக ஸ்கேன் பரிசோதனை செய்யவந்த 46 வயதான பெண்ணொருவரை நிர்வாணமாக படம் எடுத்த நபரொருவர் தொடர்பான சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

சிறுநீரகத்துடன் தொடர்புடைய நோய் நிலை சம்பந்தமாக ஸ்கேன் பரிசோதனைக்காக குறித்த பெண் கண்டியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த ஆய்வு கூட பணியாளர் ஒருவர், உடைகளை அகற்றி ஸ்கேன் செய்வதற்கு தேவையான விஷேட உடையை அணியுமாறு அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த பெண் அந்த உடையை அணிந்த பின்னர் சேவையாளரின் ஆலோசனைக்கு அமைய அந்த பரிசோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கையில் படுத்துள்ளார்.

குறித்த சோதனையை செய்வதற்கு மனதை ஒருநிலை படுத்த வேண்டும் என அந்த சேவையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உதவுவதாக கூறி கருப்பு பட்டியால் அந்த பெண்ணின் கண்களை கட்டியுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் குறித்த நபரின் கைகள் அந்த பெண்ணின் உடலில் பட்டுள்ள நிலையில், அவர் எழுந்து கருப்பு பட்டியை அகற்றி பார்த்த போது அந்த நபர் கையடக்க தொலைபேசியில் தன்னை படம் பிடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் சத்தமிட்டுள்ளார்.

இதனால்  சந்தேக நபர் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண் குறித்த நபரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க போராடியுள்ளார்.

அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் அந்த பெண், காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், கண்டி மாவட்ட குழந்தைகள் மற்றும் மகளீர் பணியக அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர், குறித்த தனியார் மருத்துவமனையில் கதிரியக்கவியல் பிரிவில் பணியாற்றிய சேவையாளர் என தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த நபரின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்த போது அந்த பெண்ணின் நிர்வாண படங்கள் உள்ளிட்ட மேலும் இவ்வாறான படங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஏப்பிரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி காவற்துறை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.