Monday , May 29 2017

வீதியில் குப்பைகளை கொட்டிய 15 பேர் அக்குரணை அலவத்துகொடை பொலிசாரிடம் சிக்கினர்.


(மொஹொமட்  ஆஸிக்)

கண்டி மாத்தளை ஏ- 09 வீதியில் குப்பைகளை கொட்டிய 15 சந்தேக நபர்களை கடந்த ஒரு மாத காலத்ததுக்குள்
கைது செய்துள்ளதாக அலவத்துகொடை பொலீஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான பாதையான ஏ -09 வீதியில் இரு புறங்களிலும் குப்பைகள் கொட்டுவது பரவலாக இடம் பெற்று வருவதாகவுமு இதனை  நிருத்துவதற்கு  நடவடிக்ைக எடுத்துள்ளதாகவும பொலீஸார் தெரிவித்தனர்.

இவ் வீதியில் வாகனங்களில் செல்லும் சிலர் இவ்வாறு குப்பைகளை எறிந்து விட்டு செல்கின்றனர் எனறும அவர்களை இனம் கான்பதற்கு பல இடஙகளில் சீசீடீவீ கமராக்கள் பொருத்தபபட்டுள்ளதாகவும் பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏ -09 வீதியிலும் மற்றும் சூழவுள்ள மற்றைய வீதிகளிலும் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.

2017 03 30  ஆஸிக்