Tuesday , June 27 2017
Breaking News

விற்பனையில் ஆப்பிள், சாம்சங்கை கதறவிட்டு MI புதிய சாதனை

சீனாவின் நிகழ்ந்து கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப புரட்சியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மிகப் பெரிய வெற்றியை அடைந்தவர் லேய் ஜுன் (Lei Jun).

இவரது சியோமி (xiomi) நிறுவனம் கண்ட வளர்ச்சி ஒவ்வொரு இளம் தொழில்முனைவோருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம். சியோமி நிறுவனம் உலகில் நான்காவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளது. இத்தனக்கும் இந்த நிறுவனம் இன்னும் அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்னும் தனது விற்பனையைத் தொடங்கவில்லை.

பொதுவாகவே சீன உற்பத்தி பொருட்களின் தரம் பற்றி மேற்கத்திய நாடுகள் தவறான எண்ணம் கொண்டவை. ஆனால் லேய் ஜுன் தனது சியோமி போன்கள் மூலம் இந்த எண்ணத்தையே அசைத்துப் பார்க்கிறார்.

தொழில்நுட்ப உலகத்தைப் பொறுத்தவரை புதுமை செய்ய முனையும் தொழில் முனைவர்கள் அனைவரையும் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஒப்பிடுவது வழக்கம். தன்னை ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஒப்பிடுவதை இவர் மறுக்கிறார். இவரின் சாதனைகளைப் பார்க்கும்போது இவர் யாரையும் பின்பற்றாமல் தன்னுடைய வழியிலேயே செல்வதாகத் தோன்றுகிறது.

யார் இந்த லேய் ஜுன்: தொழில்நுட்ப உலகில் லேய் ஜுன் 1992 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார். “கிங்சாப்ட் கார்ப்” என்பது அவர் பணிக்கு சேர்ந்த நிறுவனத்தின் பெயர். பெய்ஜிங்கில் இருந்த அந்த நிறுவனம் அப்போது மோசமான நிலையின் இருந்தது. லேய் 1998 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்த பின் அந்த நிறுவனத்தின் தலைஎழுத்து மாறத் தொடங்கியது. நிறுவனத்தின் மிகப் பெரிய மாற்றங்களை இவர் ஏற்படுத்தினார்.

2010ம் ஆண்டு லேய் ஜுன் கிங்சாப்ட் கார்ப்பிலிருந்து விலகி சியோமி நிறுவனத்தைத் தொடங்கினார். உலகச் சந்தையில் ஸ்மார்ட்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை கொடிகட்டி பறக்கும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் போட்டி போட சரியான உக்தியை கையாண்டது சியோமி.

விற்பனையைப் பொறுத்தவரை ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை விட மாறுபட்ட முறையில் சியோமி செயல்பட்டது. அதாவது போன்களைக் கடையில் நேரடியாக விற்காமல் சியோமி நிறுவனம் இணையத்தில் விற்பனையைத் தொடங்கியது. சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை நேரடியாகக் கொண்டு சென்றது.

இதன் மூலம் பெரிய அளவில் செலவு குறைந்தது மட்டுமில்லாமல் சீனாவின் குறிப்பிடத்தக்க அளவில் சந்தை மதிப்பைப் பெற முடிந்தது. 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 46 பில்லியன் டாலர்கள். இந்தக் கணக்கின்படி உலகத்தின் மிகப் பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனம் இதுவே.

மேலும் சியோமி தற்போது வளர்ந்து வரும் நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில் மற்றும் இந்தியாவில் கால்பதித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் ஒரே நாளில் அதிகப் போன்களை விற்பனை செய்து ஆப்பிள், சாம்சங்கை பின்னுக்கு தள்ளி சாதனையும் படைத்தது.