Wednesday , June 28 2017
Breaking News

லெக்கின்ஸ் அணிந்து சென்ற பெண்களுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு

லெக்கின்ஸ் வகை ஆடைகளை அணிந்து சென்றதால் விமானத்தில் ஏற இரண்டும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Denver நகரிலிருந்து Minneapolis கவுண்டிக்கு இரு தினங்களுக்கு முன்னர் யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்ப தயாராக இருந்தது.

விமானத்தில் ஏற இரண்டு இளம் பெண்கள் லெக்கின்ஸ் ரக ஆடை அணிந்து வந்திருந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் லெக்கின்ஸ் ஆடை அணிந்ததால் விமானத்தில் ஏற அனுமதியில்லை என அவர்களுக்கு தடை போட்டனர்.

இரு பெண்களிடமும் மாற்று ஆடை இல்லாததால் அவர்கள் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் Jonathan Guerin கூறுகையில், எங்கள் நிறுவன விமானத்தின் வழக்கமான பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் கிடையாது.

ஆனால் விமானத்தில் ஏற மறுக்கப்பட்ட இரண்டு பெண்களும் அவர்களின் நிறுவனத்தின் பயண சலுகைகள் மூலம் இதில் பயணம் செய்ய இருந்தனர்.

அது போன்றவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது என அவர் கூறியுள்ளார்.