Monday , April 24 2017

வெளிநாட்டில் வேலைபார்ப்பவரா? உங்களுக்கும் இது நடக்கலாம்! உஷார்

மாலாவின் கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போன்று மாலா தனது வீட்டில் சமையல் வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோது, யாரோ ஒரு நபர் அவரது வீட்டு அழைப்பினை அழுத்தியுள்ளார்.

சத்தம் கேட்ட மாலா, விரைந்து சென்று வாசலை பார்த்தபோது ஆண் நபர் ஒருவர் கையில் மூன்று பார்ஷல்களுடன் நின்று கொண்டிருந்தார்.

மாலாவிடம் அவர், உங்கள் கணவர் சவுதியில் தானே வேலை பார்க்கிறார் என கேட்டுள்ளார். இதனைக்கேட்ட மாலா ஆமாம் என்றுள்ளார், அதன்பின்னர் மாலாவின் கணவர் வசிக்கும் இருப்பிடத்தை அந்த நபர் சரியாக கூறியவுடன், இதற்கு மேலும் அவரை வாசலில் நிற்கவைக்ககூடாது என்று நினைத்து அவரை உள்ளே அழைத்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்துள்ளார்.

என்னுடைய தம்பி உங்கள் கணவருடன் வேலை பார்த்து வருகிறார். உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பவதற்காக, ஒரு பரிசுப்பொருளை என் தம்பி இந்தியாவுக்கு வரும்போது கொடுத்து அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

இதனைக்கேட்டதும் மாலாவிற்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. உடனடியாக அந்த பரிசுப்பொருளை வாங்கிகொண்டார். என் தம்பி இந்த பொருளை எனக்கு கொரியரில் தான் அனுப்பி வைத்தான், மேலும் பரிசுப்பொருள் அதிகம் என்பதாலும் 1800 ரூபாய் கட்டணம் செலுத்தினேன், அதனை மட்டும் கொடுத்தீர்கள் என்றால் நான் எனது வீட்டுக்கு சென்றுவிடுவேன் என கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட மாலா, தன்னிடம் தற்போதும் பணம் இல்லை என்றும் பக்கத்து வீட்டில் வாங்கி தருகிறேன், அதுவரை ஒரு 5 நிமிடம் அமர்ந்திருங்கள் என கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இந்நபர், வீட்டில் இருந்த சில பொருட்களை எடுத்து பதுக்கிகொண்டான். இதற்கிடையில் பக்கத்து வீட்டுக்கு பணம் வாங்க சென்ற தனது வீட்டின் கதவினை பூட்டிக்கொண்டு, எல்லோரும் ஓடிவாருங்கள் என கூச்சலிட்டுள்ளார்.

இவரது சத்தத்தை கேட்டு ஓடிவந்தவர்கள், வீட்டிற்குள் புகுந்த அந்த நபரை அடித்து விரட்டியுள்ளனர். அதாவது, மாலா பக்கத்து வீட்டிற்கு சென்றபோது பக்கத்து வீட்டு பெண்மணி, எதற்கும் உன் கணவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டு இந்த பணத்தினை கொடு என்று கூறியுள்ளார்.

அதன்படியே, தனது கணவருக்கு போன் செய்தபோது, அவரோ அப்படி ஒரு பரிசுப்பொருளை நான் கொடுத்தனுப்பவில்லை என கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து உஷாராகிய மாலா, அருகில் வசிப்பவர்களுடன் சேர்ந்த அந்த நபரை அடித்து உதைத்துள்ளார். வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களின் விலாசங்களை தெரிந்துகொண்டு, இப்படி ஒரு ‘திடீர் பரிசு’ மோசடி நடந்துகொண்டிருக்கிறது. எனவே உஷாராக இருங்கள்.