Friday , November 24 2017

அக்குரணை 8ம் கட்டை விபத்து

இன்று காலை (18-03-2017) அக்குரணை எட்டாம்  கட்டையில் சுமார் 150 அடி பள்ளத்தில் ஒரு ஆட்டோ விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ சாரதி படுகாயம் அடைந்ததுடன், அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடமானது, கடந்த அடைமழை காரணமாக மண்சரிவுக்கு உட்பட்ட ஆற்று பள்ளத்தாக்கு என்பதாலும்,  இவ்விடம் சீர்திருத்த படாமல் இருப்பதுடன், அதற்கான ஒரு பாதுகாப்பு முறை ஏதும் இல்லாமல் இருபப்தாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் இதற்கு முன்பும் சில விபத்துக்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அலவதுகோடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

akurana accident_01

akurana accident_02

akurana accident_03

akurana accident_04