Monday , May 29 2017

லோன் என்ற போர்வையில் பாலியல் இலஞ்சம் கேட்டுவரும் மர்ம நபர்கள் எச்சரிக்கை!

லோன் என்ற போர்வையில் பாலியல் இலஞ்சம் கேட்டுவரும் மர்ம நபர்கள் எச்சரிக்கை!

இலங்கையில்தற்போது வேகமாக பரவிவருகின்ற ஒரு விடயமாக சிறிய கடன்(லோன்) அமைந்துவருகின்றது.

நிதி நிறுவனங்கள் மக்களுக்கு சிறிய கடன்தொகையினை வழங்கி  மக்களை  மிகுந்த சிரமத்திற்கு உற்படுத்தி வருகின்றது. குறிப்பாக மலையகத்தில் பல இடங்களில் இவ்விடயம் மக்களை மிகுந்த மன  கஸ்டத்திற்கு உற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  வடக்கு மற்றும் கிழக்கின் பின்தங்கிய கிராமங்களை இலக்கு வைத்து நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன்களால் வடக்கில் குடும்பப் பிரச்சினை அதிகரித்துள்ள அதேவேளை, பலர் அண்மைய காலங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதே வேளை குறித்த கடன் வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் கடன் கொடுக்க வழியில்லாதவர்களில் குடும்பப் பெண்களை கவர்ச்சிகரமான வார்த்தைகளால் தூண்டி தமது பாலியல் தேவைகளை நிறைவேற்ற முனைவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோன் தருவதாக சொல்லி அவர்களுடைய குடும்ப முழு விபரங்களை பெற்றுக்கொள்ளும்  லோன் தருகின்ற நபர்கள் அவர்களது கடன் சுமையை தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு பாலியல் இலஞ்சம் கோரி பல பெண்களை தன்னுடைய காம இச்சைகளுக்கு பயன்ப்படுத்த வருதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

பெண்களே இவ்விடயத்தில் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ளுங்கள்.

வடக்கில் பேராபத்தாக மாறியுள்ள இந்தக் கடன் திட்டம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களை தெளிவூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதனை அனைத்து தரப்பினரும் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post appeared first on Akuranatoday.com