Monday , May 1 2017

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடியான புதிய திட்டம் வித்தியாசமானது!

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடியான புதிய திட்டம் வித்தியாசமானது!

தற்போது உலகலாவிய ரீதியில் பேஸ்புக் பாரியளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

சமூகவலைதளங்களில் தனக்கென ஒரு தனியிடத்தை கொண்டுள்ள பிரபல பேஸ்புக் நிறுவனம் பிடித்துள்ளது.

இதற்கமைய புதிய வசதிகளுடன் தனது அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பதிப்பில் Discover People என்னும் புதிய விடயம் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. LinkedIn மற்றும் Tinder சமூகவலைதளத்தில் உள்ள விடயங்கள் பேஸ்புக்கில் கலவையாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் புதிய நட்புகள் கிடைக்கும், நாம் வசிக்கும் நகர மக்களின் பேஸ்புக் நட்புகளை கூட இதன் மூலம் பெற முடியும். நாம் இருக்கும் பேஸ்புக் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் பார்க்க முடியும்.

அடுத்தவர்களின் profileலுடன் நம் profileலில் ஒற்றுமையாக உள்ள நண்பர்கள் பட்டியல், location மற்றும் Facebook Pagesஐயும் காண முடியும்.

Tindery இருப்பதை போல புதிய நட்புடன் இணையும் வரை profile மூலம் swipe செய்யலாம். பின்னர் அவர்களை friend list ,follow மற்றும் மெசேஜ் அனுப்பலாம்.

இந்த வசதி தற்போது iOS மற்றும் அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணினிக்கான பதிப்பு மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

The post appeared first on Akuranatoday.com