Tuesday , June 27 2017
Breaking News

சம்சுங்கின் புதிய சாதனத்தின் அதிரடி புகைப்படம் இதோ!

சம்சுங்கின் புதிய சாதனத்தின் அதிரடி புகைப்படம் இதோ!

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய சம்சுங் கலக்ஸி   S3 அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சாதனத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இம்முறை வெளியான புகைப்படமும் ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் காணப்பட்ட சாதனம் போன்றே இருக்கிறது. இத்துடன் கூடுதலாக விசைப்பலகை ஒன்றும் காணப்படுகிறது.

புதிய புகைப்படத்தில் சாம்சங் டப்லெட்டுடன் காணப்படும் விசைப்பலகை அல்லது ஐபேட் ப்ரோ ஸ்மார்ட் கீபோர்டு போன்று காட்சியளிக்கிறது.

எனினும் இந்த சாதனம் ஐபேட் ப்ரோ போன்று ஸ்மார்ட் கனெக்டர் கொண்டிருக்குமா அல்லது ப்ளூடூத் வசதி வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இத்துடன் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் தொலைபேசியில்  முதலில் வழங்கப்பட்ட சாம்சங் நோட்ஸ் ஆப் இந்த டப்லெட்டில் வழங்கப்படுவதை புதிய புகைப்படம் தெரியப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த டேப்லெட்டுடன் சாம்சங் S-பேனா வழங்கப்படும் என்றும், இதில் எல்டிஇ வசதி கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாதனத்தின் திரையில் ஏப்ரல் 4 என்ற திகதி  இடம் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் விற்பனை  திகதியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

The post appeared first on Akuranatoday.com