Tuesday , June 27 2017
Breaking News

அப்பிள் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் வசதி அறிமுகம்!

அப்பிள் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் வசதி அறிமுகம்!

புதிய அம்பிள் கையடக்க தொலைபேசியில்  வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் அப்பிள் கையடக்க தொலைபேசி செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தாலும், இந்த ஐபோன் குறித்த தகவல்கள் சமீப காலங்களில் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோனில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி முதன்மையானதாக இருக்கிறது.

அந்த வகையில் புதிய ஐபோனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்யும் மற்றொரு தகவல் இணையங்களில் வெளியாகி வருகிறது.

பிரபல ஐபோன் வல்லுநரான ஜெ.பி மார்கன் தெரிவித்துள்ள தகவல்களில் அப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்கள் இணைந்து வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

அப்பிள் மற்றும் பிராட்காம் நிறுவனங்கள் இணைந்து வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதோடு இந்த ஆண்டு வெளியாகும் ஐபோனில் நிச்சயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன் புதிய ஐபோனில் OLED ஸ டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

The post appeared first on Akuranatoday.com