Tuesday , June 27 2017
Breaking News

HACKING-ல் இருந்து பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியவை!

HACKING-ல் இருந்து பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியவை!

இணையம் எந்த அளவிற்கு நமக்கு பயனுள்ளதாக உள்ளதோ அந்த அளவிற்கு தீங்கு விளைவிக்கிறது.

வலைத்தளங்களிலிருந்து நமது தனிப்பட்ட தகவல்கள், வங்கிகணக்குகளின் தகவல்களும் எளிதாக திருடப்படுகின்றன.

நாம் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் இத்தகைய பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Anti-Virus software-களை பயன்படுத்தலாம்

இதனை நமது கம்ப்யூட்டர், செல்போனில் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற வைரஸ்கள் ஊடுருவதைத் தடுக்கலாம்.

தேவையற்ற link-களை பார்ப்பதை தவிர்க்கலாம்

பெரும்பாலாக சமூக வலைத்தளங்களே நமது தகவல்களை எளிதாகத் திருடுவதற்கு உதவுகிறது.

ஹேக்கர்கள் நமது விவரங்கள், நாம் ஆர்வம் காட்டும் பக்கங்களைக் கண்டறிந்து அதனை உபயோகித்து, போலியான பக்கங்களை உருவாக்கி அனுப்பும் தேவையற்ற Link-களை பார்வையிடாமல் தவிர்க்கலாம்.

வெவ்வேறான பாஸ்வேர்டைப் பயன்படுத்தலாம்

வங்கிக் கணக்கு, சமூக வலைத்தளங்கள், மெயில் போன்றவற்றிற்கு ஒரே பாஸ்வேர்டினைப் பயன்படுத்தாமல் வெவ்வேறானவற்றினைப் பயன்படுத்தலாம்.

ஒரே மாதிரியான பாஸ்வேர்டினை நாம் பயன்படுத்தும் போது எளிதாக Hack செய்யப்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஷொப்பிங்கிற்கு பாதுக்காப்பான தளங்களைப் பயன்படுத்தலாம்

ஆன்லைன் ஷொப்பிங்கில் பணம் செலுத்தும் போது Browser-ல் Lock போன்று குறியிடப்பட்டுள்ளதா என சரிப்பார்க்க வேண்டும்.

மேலும் http –ல் இருந்து https என்று இணையத்தளப் பக்கமானது மாறவேண்டும்.இவ்வாறு இருந்தால் மட்டுமே அந்த தளங்களைப் பயன்படுத்தலாம். இல்லையெனில் அவற்றினைத் தவிர்க்க வேண்டும்.

தேவையற்ற செய்திகளை(Pop-Up) புறக்கணிக்க வேண்டும்

நாம் பயன்படுத்தும் வலைத்தளங்களில் தேவையற்ற செய்திகள் (Pop-Up)ஏதேனும் வந்தால் அதனைப் பார்வையிடாமல் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் இந்த செய்திகளை நாம் பார்வையிடும் போது நமது தகவல்களை Hacker-களால் எளிதாக திருடப்படும்.

பாதுகாப்பான Operating system உடையவற்றினைப் பயன்படுத்தலாம்

MAC போன்ற OS-னை உடைய கம்ப்யூட்டர்,செல்போன் போன்றவற்றினைப் பயன்படுத்தும் போது அதனை Hack செய்வது கடினமாகிறது.

இதனைப் பயன்படுத்தும் போது தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம்.

Verification Code போன்றவற்றினைப் பயன்படுத்தலாம்

நாம் பயன்படுத்தும் மெயில், சமூக வலைத்தளங்களை ஒவ்வொரு முறையும் பார்வையிடும் போது நமது மொபைல் நம்பர்க்கு Verification Code வருமாறு அமைக்கலாம்.

இதனால் மற்றவர்கள் நமது Account-களை பார்வையிட முடியாது.

sdfsdf

விவரங்களை பகிர்வதைத் தவிர்க்கலாம்

சமூக வலைத்தளங்களில் நமது முகவரி, பிறந்த தேதி, மொபைல் நம்பர் போன்றவற்றை பதிவதை தவிர்ப்பதன் மூலம் விவரங்கள் திருடப்படுவதைத் தவிர்க்கலாம்.

நமது விவரங்களை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பார்க்கும்வண்ணம் மாற்றலாம்.(Privacy settings)

வங்கிகணக்கின் விவரங்களை பதிவு செய்வதைத் தவிர்க்கலாம்

இணையத்தளங்களில் ஷொப்பிங் செய்யும் போது வங்கிகணக்குகளின் விவரங்களைப் பதிவு செய்வதனைத் தவிர்ப்பதால் வங்கி கணக்குகள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் பொது இடங்களில் காணப்படும் Wi-Fi யினை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் விவரங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

The post appeared first on Akuranatoday.com