Sunday , June 25 2017
Breaking News

நவீன இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் “பண்பாட்டியல் அணுகுமுறை”

“இஸ்லாமிய உலகில் எங்கும் “இஸ்லாமியப் பண்பாடுகளை” கற்பதற்கான ஒரு தனியான பாடப்பரப்போ அல்லது பல்கலைக்கழகமோ இல்லை என்பது பண்பாடுகள் குறித்து முஸ்லிம் உம்மாவின் கரிசனையற்ற தன்மையை சுட்டிக் காட்டப் போதுமான சான்றாகும். அரபு-இஸ்லாமிய உலகம் “இஸ்லாமியப் பண்பாடுகள்”தொடார்பாக சிந்திப்பதற்கு ஏன் தவறிவிட்டது? என்பதைப் பொறுத்தவரை அதற்கான மூலநியாயம் ஓன்றாகும். அது நீண்ட காலம் “மதச்சார்பற்றவாதம் ,தேசியவாதம், இஸ்லாமியவாதம் என்ற கருத்தியல் சார்ந்த யுத்தங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததால் இஸ்லாமிய உம்மாவின் பிரச்சினைக்கு “கருத்தியலை தீர்வாக” நோக்கியதே தவிர“ இஸ்லாமியப் பண்பாட்டின் பரிமாணங்களை” நோக்கத் தவறிவிட்டது.

– ஓர் அறிமுகக் குறிப்பு –

அரபு மொழியில் : கலாநிதி முஃதஸ் அல்கதீப்

நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பரப்பில் பேராசிரியர் முஃதஸ் அல்கதீப் அதிகம் அறியப்பட்டவர். கட்டார் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இஸ்லாமிய சட்டவாக்கத்திற்கும் பண்பாட்டுக்குமான ஆய்வு மையத்தின் “இஸ்லாமிய முறையியல் துறை” ஆய்வாளராகவும் பணிபுரிகிறார். இஸ்லாமிய சட்ட சிந்தனை தொடர்பாக ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர்

#ct_us7j2k2v4bwdcccdzybp {font-size:12px;}

நவீன  இஸ்லாமிய  சிந்தனைத் தளத்தில்  பேசுபொருளாக மாறியுள்ள “பண்பாட்டியல் அணுகுமுறை” ( Islamic Ethical Approach ) என்பது மனித சமூகம்  முஸ்லிம்  உம்மாவுடைய  விவகாரங்களை  மற்றும் எதிர்கொள்ளும்  சவால்களை  “இஸ்லாமியப்  பண்பாடுகளின்” ஒளியில் ஆய்வு செய்வதற்கான முயற்சியாகும். பண்பாடுகள்  என்பது  ஒரு சமூகத்தின் உருவாக்கத்துடன்  இருப்புடன்  தொடர்புபட்டவை. அதே போல் “இஸ்லாமியப் பண்பாடுகள்” என்பது  முஸ்லிம்  உம்மாவின்  அடையாளத்துடன்  நெருக்கமான பிணைப்பை  கொண்டவை. இதனை  இமாம்  இப்னுல்  கையூம்  (ரஹ் ) அவர்கள் விளக்கும்  போது  “மார்க்கம் என்பது பண்பாடுகளே. யார் பண்பாடுகளில் உயர்வடைகிறாறொ அவர்  மார்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுக் கொள்கிறார்” என்கிறார்   இஸ்லாமியப் பண்பாடுகளை நோக்கி எமது அவதானத்தை  இன்னும் ஆழப்படுத்திக்  கொள்வதற்கு  இமாம் இப்னுல்  கையூம் (ரஹ்) அவர்களின் கருத்து  தூண்டுகிறது. ஏனெனில் இம்மார்க்கத்தின் அடிப்படையே  (Centrality of Islam)  “பண்பாடுகள்”என அவர் கூறுகிறார். ஆனால்“பண்பாடுகள்”என்ற  அகன்ற பரப்பை  வெறுமனே  மக்களை நல்வழிப்படுத்துவற்கான  தனிமனித  நடத்தையுடன்  தொடர்புபட்ட  ஒன்றாகவே மரபு ரீதியான  இஸ்லாமிய  சிந்தனை  வரையறை  செய்கிறது. இங்கு“தனிமனித  நடத்தை” என்ற  தளத்தை கடந்து சமூக விவகாரங்களில் “இஸ்லாமியப்  பண்பாடுகள்” சிந்தனையை  செயற்படுத்தப்பட வேண்டியதன்  அவசியத்தையும்  இமாம்  இப்னுல்  கையூமின்  (ரஹ்) அவர்களின்  கருத்து  எமக்கு  புலப்படுத்துகிறது.  ஏனெனில்  இம்மார்க்கத்தின்  அடிப்படையானதோர்  அம்சம்  “தனிமனிதனுடன்” சுருங்கியதாக அமைய முடியாது.

சமூக  விவகாரங்களை  “இஸ்லாமியப் பண்பாடுகளை” மையப்படுத்தி  சிந்திக்க வேண்டியது  காலத்தின்  தேவை  என்றும்  கூறலாம். இதற்கு இரண்டு நியாயங்களை முன்வைக்க  முடியும். முதலாவது  முஸ்லிம் உலகில் வேகமாகப் பரவி வரும்  வன்முறைக்  குழுக்களது  செயற்பாடுகள்  நிலைப்பாடுகள்  மற்றும்  மார்க்க நோக்குகள்  இஸ்லாத்தின்  பண்பாட்டியல் பரிமாணத்தை  சிதைக்கும்  விதமாக  அமைந்துள்ளது.  இரண்டாவது  இஸ்லாம் என்பது  வெறும்  சட்டங்களை  பின்பற்றுவதும்  அதனை  நிலைநாட்டுவதுமே என்ற  கருத்து முஸ்லிம்  சமூகத்தின்  ஆழ் மனதில்  உறுதியாக பதிந்துள்ளமையாகும். இந்த  இரண்டு  தோற்றப்பாடுகளும்  முஸ்லிம் உம்மாவை “சிந்தனைச் சிக்கலில்” ஆழமாக சிக்க வைத்துள்ளது. இஸ்லாமியப் பண்பாடுகளை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய சிந்தனையை கட்டியெழுப்புவதே முஸ்லிம் உம்மா  இன்று சிக்கித் தவிக்கும் சிந்தனைசார்ந்த இருள்களிலிருந்து  வெளியே  வருவதற்கான முதலாவது  வாயிலாகும். எனவே சமகால சுமைகளும் சவால்களும் கூட “இஸ்லாமியப் பண்பாடுகள்” குறித்து கலந்துரையாடுவதனை  இன்றியமையாததாக  கருதுகிறது.

#ct_idoskseclekm421qihyu {font-size:12px;}

உண்மையில் இஸ்லாமிய ஷரீஆவின் எல்லா வழிகாட்டல்களையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும் போது அவை இஸ்லாமியப்  பண்பாடுகளை மக்களுக்கு  மத்தியில் விருத்தி  செய்வதற்கு முயல்வதனை கண்டு கொள்ள முடியும். சில வேளை நாம் இஸ்லாமிய ஷரீஆ என்பது சில ஏவல்களினதும் விலக்கல்களினதும் தொகுப்பு  என  சுருக்கமான வட்டத்தில் புரிந்து கொண்டிருப்போம். ஆனால் அது  தவறான புரிதலாகும். இஸ்லாமிய ஷரீஆ உள்ளடக்கியுள்ள ஏவல்களும் விலக்கல்களும் கூட இறுதி இலக்காக “பண்பாடுகளை மனிதர்களிடம்” அணிவிப்பதனை  நோக்கியே நகர்ந்து செல்கிறது. ஒவ்வொரு கடமையினதும் பண்பாட்டியல் பரிமாணத்தை புரிந்து கொள்ளும் ஒரு மனிதனால் மட்டுமே பூரணமாக இஸ்லாத்திற்கு கட்டுப்பட முடியும். ஏனெனில்  இஸ்லாமிய  வழிகாட்டல்களுக்கு கட்டுப்படும் போது ஒரு மனிதனின்  நடத்தைகள்  மட்டுமன்றி  அவனது உள்ளமும்  இணைந்து சீர்ருத்தப்படுகின்றமை நோக்கத்தக்கது.

#ct_vml5bs5tecpos8wrftu1 {font-size:12px;}

இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம்  “இஸ்லாமியப் பண்பாடுகள்” விடயத்தில் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து நோக்கவில்லை என்பதே நிதர்சனமாகும். இதற்கு சிறந்த உதாரணம் என்னவென்றால் அல்குர்ஆனுக்கு மொழி, சட்டம், தத்துவம், நம்பிக்கைக் கோட்பாடுகள்  என்ற அடிப்படையில் தப்ஸீர்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால்  அல்குர்ஆனுக்கான ஓர் “பண்பாட்டியல்” தப்ஸீரொன்றைப்  பற்றி  எவரும் சிந்திக்கவில்லை. அதாவது  நாம் எமது மார்க்கத்தினதும் மூலநூலினதும் கரு “பண்பாடு” எனவாதிக்கிறோம் ஆனால் அல்குர்ஆனை பண்பாட்டியல் அடிப்படையில் விளக்கமளிப்பதற்கு எமது சிந்தனை மரபு தவறியிருக்கிறது. “இஸ்லாமியப் பண்பாடுகளை” சட்டவாக்கத்திற்கான  அடிப்படையாக  கொள்வதனை  இஸ்லாமிய வரலாற்றில் பிக்ஹூத் துறை நூல்கள் கூட புறக்கணித்து  விட்டது  என்றே கூற வேண்டும்.

#ct_qttlbj9r2rc2deqf0pbg {font-size:12px;}

பொதுவாக மூன்று வகையான தன்மைகளை இஸ்லாமிய பிக்ஹ்   நூல்களில் காணமுடியும்.

ஒன்று  ஒரு சட்டத்தை  பெறுவதற்கு “சட்டவசனம்” (நஸ்)  முன்வைத்து  நீண்ட விவாதங்களை நடாத்திச் செல்லல்.

இரண்டாவது மனிதர்களை  எப்படியாவது குறித்த இஸ்லாமிய  சட்டங்களை பின்பற்றச் செய்வதற்கும்  அதற்கூடாக  பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்வதற்கும் அழுத்தம் கொடுத்தல்.

மூன்றாவது சட்டயாப்பு சார்ந்த அந்தஸ்த்தை (Constitutional statues) இஸ்லாமிய  சட்டங்களுக்கு  பெற்றுக்  கொடுப்பதற்கு  பிரயத்தனம் எடுத்துக் கொள்ளல்  என்பனவாகும்.

“இஸ்லாமியப் பண்பாடுகளை சமூகத்தில் வளர்த்தல்” என்பது  இஸ்லாமிய பிக்ஹ் மரபில்  முக்கியத்துவம் பெற்ற சிந்தனையாக இருக்கவில்லை என்பதனை இதற்கூடாகப் புரிந்து கொள்ள முடியும். மேலதிகமாக இஸ்லாமிய  வரலாற்றில்  பிரகாசித்த மிகப் பெரும் சிந்தனையாளர்களான  இமாம் ஹாரிஸ் அல் முஹாஸபி, இமாம் ராகிப் அல் இஸ்பஹானி, இமாம் கஸ்ஸாலி, இமாம் மாவாதி  போன்றவர்களும் “மறுமை வெற்றிக்கான அடிப்படை” மற்றும்  “ஆன்மீக உயர்ச்சிகான வழிகாட்டல்கள் தொகுப்பு” என்ற அடிப்படையிலேயே  இஸ்லாமியப் பண்பாடுகளை நோக்கினார்கள். மாறாக சமூக  விவகாரங்களுக்கான  தீர்வுத்  திட்டமாக அதனை  அபிவிருக்தி  செய்யவில்லை.

#ct_mxwzqi7dt72v5pbe5wm7 {font-size:12px;}

சமகால  உலகிலும் “இஸ்லாமியப் பண்பாடுகள்” போதுமானளவு முக்கியத்துவம்  பெறவில்லை  என்று தான்  கூறவேண்டும். இன்று  பண்பாடுகள் என்பது  ஓர் தத்துவத் துறை சார்ந்த  தலைப்பாகவே  நோக்கப்படுகிறது. இஸ்லாமியப்  பண்பாடுகளையும்  கிரேக்கப் பண்பாடுகளையும் இணைத்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக  மேற்கத்தேய பண்பாட்டியல் நோக்கின்  அடிப்படையில் “பண்பாடுகளை” மதம் சார்ந்த ஒன்றாக அவை கருதுவதில்லை. ஆனால் பண்பாடுகளை இஸ்லாம் தனது  சிந்தனையின் ஊற்றாக  நோக்குகிறது. இந்த வித்தியாசம் இஸ்லாமியப் பண்பாடுகள் குறித்து விரவாகதொரு  ஆய்வுத்  தளத்தை  சமூகத்தின் சகல விவகாரங்களிலும் அதனை  பிரயோகிப்பதற்கான  முறைமையை  விருக்தி  செய்வதன் அவசியத்தை  ஏற்படுத்தியுள்ளது.  துரதிஷ்டம்  யாதெனில்  இஸ்லாமிய உலகில்  எங்கும் “இஸ்லாமியப் பண்பாடுகளை” கற்பதற்கான ஒரு தனியான பாடப்பரப்போ  அல்லது  பல்கலைக்கழகமோ  இல்லை  என்பது  பண்பாடுகள் குறித்து  முஸ்லிம்  உம்மாவின்  கரிசனையற்ற தன்மையை  சுட்டிக்  காட்டப் போதுமான  சான்றாகும். அரபு-இஸ்லாமிய  உலகம் “இஸ்லாமியப் பண்பாடுகள்” குறித்து  சிந்திப்பதற்கு  ஏன்  தவறிவிட்டது?  என்பதைப் பொறுத்தவரை அதற்கான  மூல நியாயம் ஓன்றைக்  குறிப்பிட முடியும் . அதாவது  நீண்ட காலம் “மதச்சார்பற்றவாதம்  தேசியவாதம்  இஸ்லாமியவாதம்  என்ற கருத்தியல் சார்ந்த யுத்தங்களில் தொடர்ச்சியாக  இஸ்லாமிய  சிந்தனையின் மையநீரோட்டம்  ஈடுபட்டு  வந்ததனால்  இஸ்லாமிய உம்மாவின் பிரச்சினைக்கு  “கருத்தியலை தீர்வாக” முன்வைக்கப்பட்டதே தவிர“இஸ்லாமியப் பண்பாட்டின் பரிமாணங்களை” நோக்கத் தவறிவிட்டது.

#ct_l3bfb26l76mev4ndt22h {font-size:12px;}

இறுதியாக இஸ்லாமியப்  பண்பாடுகள்  என்ற  பரப்பை  தனிமனித  நடத்தைகளை மேம்படுத்துவதற்கான  நிகழ்ச்சித்  திட்டமாக  மட்டுமே முன்வைப்பதனைத் தாண்டி இஸ்லாமிய  சட்டம் , கலை ,கலாசாரம், ஊடகம், அரசியல்  பொருளாதாரம், கல்வி ,உளவியல்  மற்றும்  மருத்துவம் என்ற அகன்ற வட்டத்தை நோக்கி அதன் பரப்பை  அகலிக்கச்  செய்ய  வேண்டிய  தேவை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் இன்றைய  முஸ்லிம் உம்மாவினதும்  மனித சமூகத்தினதும் பிரச்சினை  “கருத்தியல் சார்ந்தது” என்பது போல் தென்பட்டாலும்   அதன் ஆழத்தில்  “பண்பாட்டுக் கோளாரே” சகலவற்றையும் சீரழித்து  வருகின்றமை தெளிவானது.  இப்பிரச்சினையை  தீர்ப்பதற்கு இஸ்லாமியப் பண்பாடுகளை முழுமை செயற்திட்டமாக முன்வைப்பது இஸ்லாமிய  புத்திஜீவிகளது  மறுக்க  முடியாததொரு  பொறுப்பாகும். மட்டுமன்றி மனித சமூகத்தின்  எழுச்சியை  நோக்கிய  பொதுவானதொரு  நிகழ்ச்சித் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் தளமாகவும் “இஸ்லாமியப் பண்பாடுகள்”என்ற அம்சத்தை சிறப்பதானதொரு ஆரம்பமாகக் கொள்ளவும் முடியும்.

#ct_lj9avdrolj7i1g9606th {font-size:12px;}

Alwasath.org