Monday , May 1 2017

கோஹ்லியின் தப்பு கணக்கு: சொந்த நாட்டில் மண்ணை கவ்விய இந்தியா

புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த 23 ஆம் திகதி புனேவில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 441 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைதானத்தில் நடந்தது வேறு.

கடின இலக்கை துரத்திய இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியின் அசத்தல் சுழலில் மீண்டும் ஆட்டம் கண்டது. துவக்கம் முதல் தடுமாறிய இந்திய அணிக்கு முரளி விஜய் (2), ராகுல் (10) துவக்கத்திலேயே இருந்த இரண்டு ரிவியூவையும் வீணடித்தனர்.

பின் வந்த கோஹ்லி (13) ஸ்டீவ் ஓ கெபி பந்தை தவறாக கணித்தால், போல்டானார். அடுத்து வந்த ரகானே (18), அஷ்வின் (8), சகா (3), புஜாரா (31), ரவிந்திர ஜடேஜா (3) என ஒ கெபி சுழலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினர்.

இதையடுத்து இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 107 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் கீபே தெரிவு செய்யப்பட்டார். இவர் இரண்டு இன்னிங்சிலும் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

–>–>