Saturday , September 23 2017

அக்குறணை நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியம் (AWA-U.K) இன் ஒன்பதாவது பொதுக்கூட்டம்

அக்குறணை நலன்புரிச் சங்கத்தின் ஒன்பதாவது பொதுக்கூட்டம் கடந்த ஞாயிறு 05/02/2017 அன்று இங்கிலாந்து லெஸ்டர் மாநகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. AWA-UK ஆனது தனது ஒன்பதாவது ஆண்டை பூர்த்தி செய்து பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் இதுவரை இவ்வமைப்பின் மூலமாக அக்குறணை நகரத்திற்கு ரூபா 8,000,000 இற்கு அதிகமான பணப்பெருமாதியான வேலைகளை செய்து முடித்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.


 

இச்சங்கமானது ஒரு குறிப்பிட்ட சில செயற்பாட்டிற்குள்  தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தம்மால் முடியுமான அனைத்து சமூக மட்டத்தேவைகளிலும் தம்மாலான உதவிகளை செய்துவருகின்றது.

குறிப்பாக பாடசாலையில் கல்வி  பயிலும் 1800 எளிய மாணவ, மாணவிகளுக்கான பாதணிகளை மூன்று முறை வழங்கியமை, CSM எனப்படும் சிறப்புத் தேவைகளுக்கான பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை (monthly allowance) இதுவரை வழங்கிக் கொண்டு வருகின்றமை, கல்வியில் திறமையுள்ள மிகவும் எளிய மாணவர்களின் கல்வியை தொடர்வதற்காக புலமைப்பரிசில்கள் வழங்குகின்றமை அதில் குறிப்பாக மத்ரஸாவில்  கல்விபயிலும் மாணவர்களின் நிலுவையில் இருக்கும்  மாதக் கட்டணங்களை செலுத்தியமை, மற்றும் அடிப்படை மலசலகூட வசியற்றவர்களுக்கு ஒரு புதிய திட்டமாக மலசலகூட வசதியமைத்தல் அதில் இதுவரை நான்கு முழுமையாக பூர்த்தியான நிலையில் இன்னும் பன்னிரெண்டுக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளோம். இதுபோன்ற இன்னும் ஏராளமான வேலைகை செய்துவருகின்றோம்.

சென்ற கிழமை நடந்து முடிந்த பொதுக்கூடத்தில் அமைப்பின் நிர்வாகம் மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்த நிலையில் யாப்பிற்கு அமைய நிர்வாகமானது கலைக்கப்பட்டு வரும் மூன்று ஆண்டிற்கான புதிய நிர்வாக எட்டு அங்கத்தவர்களும் நான்கு தொண்டூழியர்களும் (volunteers) தெரிவாகினர்.

இப்புதிய நிர்வாகம் சிறப்பாக செல்வதற்கும், மேலும் வீரிய வேகத்துடன் தமது தொண்டுகளை செய்வதற்கும் அல்லாஹ்விடம் நாமும் பிராத்திப்பதோடு உங்கள் அனைவரையும் பிராத்திக்குமாறு மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

அக்குறணை கிளை நிலையத்தின் முகவரி

99A Dunuwila Road

வஸ்ஸலாம்

Shafeek Mohamed

(நிர்வாக அங்கத்தவர்)
Originally posted by Madawelanews