Friday , November 24 2017

பலகோடி பணம் ! உண்மையெது? பொய்யெது? தெரிந்தவர்கள் விளக்குவார்களா?

கீழே உள்ள facebook கருத்துபரிமாற்றம் சகோ. Lafir மற்றும் சகோ. Ruwais அவர்களுக்கிடையில் இடம்பெற்றதாகும். சமூகத்துக்கு வேண்டிய சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யக்கூடும் என்ற அமைப்பில் இதனை இங்கு வெளியிடுகின்றோம்.

உண்மையெது? பொய்யெது? தெரிந்தவர்கள் விளக்குவார்களா?
==============================================
அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை உதவி அதிபரின் கைதைத் தொடர்ந்து இன்னும் பல மறைந்திருக்கும் விடயங்கள் அம்பலத்துக்கு வருகின்ற செய்திகள் இப்போது பரவலாகிக் கொண்டிருக்கின்றன.

இதன் உண்மைத்தன்மையை `ஒரு நிமிடம்` துண்டுப்பிரசுரகர்த்தாக்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறேன். அவர்கள் இதற்கான விளக்கத்தைக் கொடுப்பார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

கேள்விப்பட்ட ஒரு விடயம்தான். கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று சொல்லிவிடாமல் இதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். ஏனென்றால், இது தனிப்பட்ட ஒருவரின் விடயமல்ல. பொதுவான விடயம்.

இனி, விடயத்திற்கு வருகிறேன்:

1. அஸ்ஹரின் பொதுப்பணம் இரண்டு கோடிகளையும் தாண்டியுள்ளது இது அனைத்தும் நலன்விரும்பிகளினால் அல்லாஹ்வின் பெயரால் அன்பளிப்புச் செய்யப்பட்டதே!

2. அந்தப் பணத்தினால் தேவையான தளபாடங்கள், வசதிகள் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

3. ஆனால் அந்தப் பணம் இலங்கையின் கரையோர மாவட்டமொன்றில் ஐஸ் உற்பத்தி ஸ்தாபனமொன்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

4. மற்றுமுண்டான முதலீடுகள் இருக்கின்றனவா?

5. அன்பளிப்புச் செய்தவர்கள் பாடசாலை அபிவிருத்திக்குக் கொடுத்த தர்மப் பணத்தை இவ்வாறு முதலீடு செய்யலாமா?

வதந்திகள்தான் செய்திகளாகின்றன. இது ஒரு வதந்தி மட்டும்தானா அல்லது இதில் ஏதும் உண்மைகள் உண்டா?
அக்குறணையில் தர்மப் பணத்தை தம் சொந்த வியாபாரங்களுக்காக பயன்படுத்திய கவலைக்குரிய நிகழ்வுகள் முன்பும் நடந்திருக்கின்றன. நாலு பேர் மத்தியில் எழுந்து அழுதுவிட்டால் மன்னிப்பளிக்கும் மகத்தான மனப்போக்கு அக்குறணை மக்களுக்குண்டு. இதையே தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முயலும் கூட்டம் மீண்டும் உருவாகிவிடாமல் அதாவது நம்பிக்கைத் துரோகிகள் உருவாகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு அக்குறணைவாசிகள் முன்வர வேண்டும்.

இனி, மேற்குறிப்பிட்ட முதலீடுகள் பற்றிய செய்தி சரியா தவறா என்பதை `ஒரு நிமிடம்` துண்டுப்பிரசுரகர்த்தாக்கள் அறியத்தருவார்கள் என்ற நம்பிக்கையோடு இதை முடிக்கிறேன்.

அந்தத் துண்டுப்பிரசுரத்திற்கு மட்டுமே தங்களது பங்களிப்பு இருக்கிறது என்று அவர்கள் சொல்வார்களானால் அவர்களிடம் விளக்கம் கேட்டதையிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
Mohamed Misru Lafir

உங்கள் கேள்விகளுக்கு பதில் பார்ப்போம்

1. பணம் 2 கோடி இல்லை அதில் பாதியிலும் குறைவு , அதெற்காக பணம் சேகரிக்கப்பட்டது ஜப்பானில் (அஸ்ஹர் ஃபௌன்டேசனுக்காக)அதில் 99% அஸ்ஹாரில் கல்வி கற்றவர்கல் சுமார் 75 -90 பேர்வரை பண உதவி செய்தார்கள் ,

2. அந்த பணத்தை எதற்கு பாவிக்க வேண்டும் என்று யாப்பில் குரிப்பிடபட்டிருக்கும் சட்டதிட்டத்திற்கு அமைய OAU (Old Azharians Union) பாடசாலைக்கு செலவு செய்யும். , நீங்கள் கேட்கும் கேள்வியை பைதுல்மாலிடமும் கேட்கலாம், “ஏன் ஊரிலுல்ல செலவு எல்லாவற்றையும் பைதுல்மால் செய்யவில்லை என்று?”

3. ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை, உங்கள் கணக்குப்படி பார்த்தாலும் அதிலிருந்து ஐந்து மடங்காவது தேவைப்படும், இந்த பணத்தை எமது யாப்பின்படி நிரந்தர முதலீட்டில் முதலீடு செய்ய முடியாது அதுவும் 20 லட்சம் ருபாவிற்கு அதிகமாக முதலீடு செய்யவும் முடியாது, மூன்று மாதத்திற்கு அதிகமாக ஒருவரிடமோ அல்லது நிருவனமொடமோ முதலிடவும் முடியாது. * அந்த ஐஸ் கம்பணியில் ஒரு சதமாவது இந்த பணம் முதலீடாக செய்யப்படவில்லை.

4. மேற்குறிப்பிட்ட வரையரையில் சிறு முதலீடுகல் மட்டுமே இருகின்றது

5. நாங்கல் பள்ளியில் கஞ்சிக்கு என்று பணம் சேர்த்து கபராது அடிக்கும் கூட்டம் அல்ல நாங்கல் இந்தப்பணத்தை சேர்க்கும் பொழுது அனைவருக்கும் எமது யாப்பின் பிரகாரம் இப்பணத்தை இப்படித்தான் பயன்படுத்தப் போகின்ரோம் என்று விளக்கி விட்டுத்தான் பெற்றுள்ளோம்.

இதை இப்படி செய்யாமல் நீங்கல் சொல்வது போல செய்தால் தான் தவறு …

குறிப்பு … எமக்கு பணம் தந்த அனைவரும் இன்றும் எமது தொடர்பிலே இருக்கின்ரனர் அவர்கலுக்கு எமது (OAU) பாடசாலையின் நிதி நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டு இதன் கணக்குகல் முடிந்த அளவு தெரிவிக்கப் படுகின்ரது,

சந்தேகம் இருந்தால் முதலில் சம்பந்தப்பட்டவர்கலிடம் விசாரித்து விட்டு பகிரங்கமாக சவால் விடுவோமாக ,.

“அந்த ஒரு நிமிடம்” துண்டுப் பிரசுரம் OAU வினால் வெளியிடப்படவில்லை அதில் குறிப்பிட்டது போல பெற்ரோர்கல் பழைய மாணவர்கல் நலன் விரும்பிகள் என ஒரு பெரும்கூட்டம் இணைந்து பிரசுரிக்கப்பட்டது அதில் OAU அங்கத்துவர்களும் இருந்தனர், பொதுப் பணம் என்றாலும் நாங்கல் எப்படி எதுக்கு என்று சேகரித்தோமோ அதன்படி அதை செலவு செய்வதே முறையும், பண்பும் ஆகும் , உங்கல் மனம் காயப்படும் படி எதாவது எழுதி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

Seyed Mohamed Ahamed Ruwais