Sunday , June 25 2017
Breaking News

ஸஹாபாக்கள் மத்தியில் நிலவிய கருத்து முரண்பாடுகள்

முன்னுரை

இது ஒரு சிறிய புத்தகமாக இருந்தாலும் ஆழமான விடயமொன்றை உரையாடுகிறது. ஸஹாபாக்கள் மத்தியில் நிலவிய கருத்து முரண்பாடுகள் விடயத்தில் புது வகையான பார்வையொன்றை இப்புத்தகம் அறிமுகப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கிறது.

#ct_a3cr9q28y5c9nnx8fln9 {font-size:12px;}

15873330_143130426182313_3279517290018742483_n

அவர்களில் யார் சிறந்தவர் என்ற வாதம்.

#ct_42ew5gz604ffkycil4vy {font-size:14px;}

குலபாஉர் ராஷிதூன்களது ஆட்சிக்கு சட்ட அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் வாதம் என்று தொடர்ந்த வாக்கு வாதங்களிலிருந்து வெளியேறி நிகழ்வுகளை பகுப்பாய்வுக்குட்படுத்தி அவற்றிலிருந்து அடிப்படைவிதிகளை உருவாக்கி, படிப்பினை பெறுவதற்கான ஒரு முயற்சிதான் இப்புத்தகம்.  ‘கோட்பாடு, தனிமனிதன், வஹி, வரலாறு இவற்றை பிரித்தறிவது’ என்று இப்புத்தகத்தை இன்னொரு வசனத்திலும் குறிப்பிடலாம்.

#ct_6qadjwwi2r2y1v3cj54z {font-size:12px;}

இஸ்லாமிய வரலாற்றை புது அணுகுமுறை கொண்டு நெருங்குகிறது இப்புத்தகம். தனிமனிதர்களுக்குப் பதிலாக‌ கோட்பாடுகளுக்கு தூய்மைப் பண்பைகொடுக்க இப்புத்தகம் அழைப்பு விடுக்கிறது. அதே நேரம் கோட்பாடுகள் அனுமதித்த விதத்தில் முன்னோர்களுக்கான கண்ணியத்தையும் மரியாதையையும் கொடுக்கவும் வலியுருத்துகிறது.

#ct_jzxwgd95eg77t4181g1h {font-size:12px;}

ஸஹாபாக்கள் மத்தியில் நிலவிய கருத்து முரண்பாடுகளை ஒன்றொன்றாக எடுத்து விளக்குவதோ அல்லது அவற்றை விலாவாரியாக ஆய்வுக்குட்படுத்துவதோ இப்புத்தகத்தின் நோக்கமல்ல. மாற்றமாக அம்முரண்பாடுகளை கையாள்வதற்கான சில அடிப்படைவிதிகளை முன்வைத்து இஸ்லாமிய சமூகம் அவற்றினூடாக எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான படிப்பினைகளை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்  என்பதை காட்டுவதற்கான ஒரு முயற்சி. பகுப்பாய்வை பலப்படுத்துவதற்கு அல்லது உதாரணம் காட்டுவதற்கு ஒரு சில நிகழ்வுகளைக் கொண்டு வருகிறோம். இங்கு முன்வைக்கப்படும் அடிப்படைவிதிகள் வரலாறை மீள்வாசிப்பதற்கு பெரிதும் துணைபுரியும் என உறுதியாக நம்புகிறோம்.

#ct_qskj470vp1kh133rpco3 {font-size:12px;}

வரலாறை விடஅரசியல் சிந்தனைபகுதிக்கே இப்புத்தகத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.தனி மனித நலவை விட கோட்பாட்டை மேலாகக்கருதிய ‘ இல்முல்ஜரஹ்வத்தஃதீல்’ அறிஞர்களின் சிந்தனை முறைமையை நாம் இங்கு பிரயோகித்திருக்கிறோம். ஹதீஸ்களை அறிவிக்கும் ராவீக்களது குறைகளை வெளிப்படுத்துவதுபுறம் பேசுதல் எனும் ஹராமான செயலல்ல;

மாற்றமாக ஷரீஆவைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என இமாம் முஸ்லிம் தனது ஸஹீஹ் முஸ்லிமுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

#ct_rjpbfifmscxzikhifv9l {font-size:12px;}

இஸ்லாமிய அரசியல் சிந்தனை சிப்பீன் யுத்தத்தை தொடர்ந்து வந்த ‘அடக்குமுறை’  சூழலில் தோற்றம் பெற்றிருக்கிறது. அவை வரலாற்று நிகழ்வுகள் என்ற வரையறையுடன் நின்றுவிடாமல் இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கும் அளவுக்கு அவைதாக்கம் செலுத்தியிருக்கின்றன.இஸ்லாமிய வரலாறு, அரசியல் சிந்தனை பகுதிகளில் ஈடுபடுபவர்கள் இவ்வுண்மையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மூலாதாரம் தரத்தில் வஹி மற்றும் வரலாற்று நிகழ்வுகள் ஆகிய இரண்டையும் ஒன்றோடொன்று குழப்பிக் கொண்டமையும் மிகப் பெரும்சிக்கலை தோற்றுவித்திருக்கிறது. முன்னோர்களது வாழ்க்கையை ஒட்டுமொத்த பார்வைகொண்டு அளவிடதவறியிருக்கிறோம். அவர்களது நல்ல பக்கங்களை வர்ணிப்பதோடு நின்றுவிடாமல் அவர்கள் விட்ட பிழைகளையும் சுட்டிக் காட்டுவதாக எமது ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும்.

#ct_523n32gwx1ytsx088500 {font-size:12px;}

ஷரீஆ ஆதாரங்களையும் சமூகங்களது முடிவுகளையும் வாசித்துப் பார்க்கின்ற போது கோட்பாடுகளையும் தனிமனிதர்களையும் குழப்பிக் கொள்வது மிகக்கடும் சிந்தனைநோய் எனப்புரியமுடிகிறது. நபிﷺ அவர்கள் தனது சுன்னாவை முழுமையாக பின்பற்றும் படி கூறியதோடு தனக்குப் பின்வரும் ஆட்சியாளர்களைக் கூறும் போது ‘நேர்வழி’ எனும் பண்பையும் இணைத்துக் கூறியிருக்கிறார். இது கோட்பாட்டையும் தனிமனிதனையும் பிரித்துக்காட்டும் ஒரு பிரயோகம்.தனிமனிதன் ஸஹாபாதரத்திலிருந்தாலும் ‘நேர்வழி’ என்ற பண்புமுக்கியத்துவம் கொடுத்துகாட்டப்பட்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக முன்னோர் பற்றியபார்வைகள் கோட்பாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனி மனிதர்களுக்கும் கொடுத்து நோக்கியிருக்கின்றன.  சில ஸஹாபாக்களை பாதுகாக்க முற்பட்டு அவர்களது அரசியல் அநியாயங்களையும் பிழைகளையும் நியாயம் காணுமளவுக்கு வாசிப்புக்கள் சென்றிருக்கின்றன.

#ct_7ys18n0loxvlatucom8o {font-size:12px;}

குறைபாடுகள் கொண்டிருக்கும் எமது வரலாற்றுப் பாரம்பரியம் நாம் இன்று எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளின் ஒரு பாகம். நோயுடைய பாரம்பரியத்துக்கும் அரசியல் அடக்கு முறைக்கும் இடையில் இருப்பு சார்ந்த தொருதொடர்பிருக்கிறது. எகிப்து கொடுங்கோள் பிரவ்ன்களது ஆட்சிக்காலங்களில் சூனியம் வேரூன்றிப் போயிருந்தது இப்பின்னணியில்தான். குறைபாடுகள் கொண்டிருக்கும் எமது வரலாற்றுப் பாரம்பரியமும் வித்தியாசமான தோற்றப்பாடுகளை தோற்றுவித்து வந்துள்ளது. அடக்குமுறைக்குபழகிப்போனவர்கள்தம்மையறியாமலேயேஅதனைசிந்தனைரீதியாகவும்பண்பாட்டுரீதியாகவும்அதனைநியாயப்படுத்துகின்றனர்.

#ct_pozrohvpp62881xqe36j {font-size:12px;}

இஸ்லாமிய சமூகத்தின் முதல் பரம்பரையினர் நம்பிக்கை சார்ந்து தோன்றியரித்தத்தை மிகக் கச்சிதமாக எதிர் கொண்டனர். எனினும் அதனுள்ளாலிருந்து தோற்றம்பெற்ற’ அரசியல் சார்ந்தரித்தத்’  இன் முன்னால் அவர்கள் தோல்வி கண்டனர். கிலாபத்தை மன்னராட்சியாக மாற்றிய அவ்வரசியல் ரித்தத் இஸ்லாமிய நாகரீகத்தின் போக்கை மாற்றியமைத்தது. இன்று வரை முஸ்லிம்களது வாழ்வமைப்பில் அது ஆதிக்கம் செழுத்தி வருகின்றது.

#ct_b8i2w0g5ekc70hcftlpg {font-size:12px;}

ஆரம்பகால அஹ்லுஸ்ஸுன்னாஅறிஞர்கள் பாதினிய்யா, ஷீஆ, கதரிய்யா சிந்தனைகளின் பிழைகளையும் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தினர். அன்று பரவிப்போயிருந்த அச்சிந்தனை பித்அத்களை மிகக்கடுமையாக எதிர்த்துநின்றனர். அது அவர்களின் முதன்மைப்பணியாக இருந்தது.

இன்றைய முதன்மைப் பணிசர்வதிகாரத்தினதும் அடக்குமுறையினதும் குறைகளை அம்பலப்படுத்துவதுடன் அவர்களுக்கிருக்கும் சட்ட அங்கீகாரத்தை நீக்குவதாகவும் தான் இருக்க முடியும். நம்பிக்கைசார்ந்த பித்அத்தை விட அரசியல் சார்ந்த பித்அத் ஆபத்தில் எவ்விதத்திலும் குறைந்ததல்ல. 14 நூற்றாண்டு வரலாறு இதற்கு ஆதாரம்.

ஸஹாபாக்கள் காலத்து அரசியல் பிரழ்வுகளை விமர்சனப் பார்வை கொண்டணுகாது, அவற்றுக்கு நியாயம் கண்டு கொண்டிருக்கும் காலமெல்லாம் எம்மால் ஒரு போதும் நவீன கால சர்வதிகாரிகளையும் அடக்குமுறையாளர்களையும் குறைகாணமுடியாது. அரசியல் அநீதியை ஆரம்பகாலத்தவர்களுக்கு ஆகுமானதாகவும் நவீன காலத்தவர்களுக்கு ஹராமானதாகவும் முன்வைத்துபண்பாட்டு, சிந்தனை முரண்பாட்டுக்குள் வீழ்ந்து விட முடியாது.

#ct_d0ygsq3m1xp3z8q9lq03 {font-size:12px;}

ஸஹாபாக்கள் மத்தியில் நிலவிய அரசியல் முரண்பாடுகள் விடயத்தில் ஈடுபட இஸ்லாமிய அறிஞர்களில் அதிகமானவர்கள் பின் வாங்கினாலும் அம்முரண்பாடுகளிலிருந்து படிப்பினைபெறுவதற்கும் அடிப்படைவிதிகளை உருவாக்குவதற்கும் அவர்கள் தயங்கவில்லை. இமாம் ஹைஸமி தனது தொகுப்பில் பின்வரும் தலைப்பை கொண்டு வருகிறார்: ‘தூதரது தோழர்கள் மத்தியில் உருவானமுரண்பாடுகள்; இமாம் அஹ்மத் மற்றும் சில அறிஞர்கள் – தபரானி, பஸ்ஸார், அபீயஃலா… போன்றோரையேநாடுதல்- இவ் விடயம்பற்றி பேசியிறா விட்டால் நானும் பேசியிருக்கமாட்டேன்’.

ஸஹாபாக்கள் மத்தியில் தோன்றிய முரண்பாடுகளை உரையாடலுக்கு எடுப்பது எவ்வித பயனையும் கொண்டு வரப் போவதில்லை என சிலர் கூறுகின்றனர். முஸ்லிம் சமூகம் ‘வரலாற்றுச்சிக்கல்’ இல் எவ்வாறு நுழைந்தது என்பதை அறியாதவர் அதனை அச்சிக்கலிலிருந்து வெளியேற்ற சக்தி பெறப்போவதில்லை. ஸஹாபா சமூகம் எதிர்கொண்ட போராட்டங்களை நினைவு கூர்ந்துயாரும் இன்பமடைவதில்லை. என்றாலும் வைத்தியர் கசப்பான மருந்துகளை சில போது எழுதிக்கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார். சத்திரசிகிச்சையின் போது கூறிய ஆயுதங்களை கூட பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நோயை அப்புறப்படுத்துவதற்கு சில போது அதுதான் ஏக வழியாகக்கூட இருந்து விடுகிறது.

முஹம்மத் இப்னு முஹ்தார் ஷன்கீதி

#ct_ywp2okwga9ezp8swan1f {font-size:12px;}

Alwasath.org