Wednesday , April 26 2017

பெண்கள் ஜனாஸா தொழுதல்

பெண்கள் ஜனாஸா தொழக்கூடாது என்ற ஒரு பிழையான கருத்து நமது சமூகத்தில் காணப்படுகின்றது. ஆனால் இஸ்லாமியசட்டத்துறை அறிஞர்கள் யாரும் பெண்கள் ஜனாஸா தொழுவது கூடாது என்று சொல்லவில்லை. மாறாக அனைவரும் அதனை அனுமதித்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களை அதற்கு ஆதாரமாக சொல்கின்றனர்.

#ct_cqwtb0qqkedkuyn1yhgb {font-size:12px;}

عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، أَنَّهَا لَمَّا تُوُفِّيَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يَمُرُّوا بِجَنَازَتِهِ فِي الْمَسْجِدِ فَيُصَلِّينَ عَلَيْهِ فَفَعَلُوا فَوُقِفَ بِهِ عَلَى حُجَرِهِنَّ يُصَلِّينَ عَلَيْهِ

ஸஃத் இப்னு வக்காஸ் (ரழி) மரணித்த போது நபி(ﷺ) மனைவிமார்கள் ஜனாஸா தொழுவதற்காக அவரை பள்ளிக்கு கொண்டு வருமாரு தூதனுப்பினார்கள்.ஜனாஸாவை கொண்டு வந்த பின் அவருக்காக ஜனாஸா தொழுதார்கள்.
முஸ்லிம் 129,2124

عن أبي هريرة رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ “من شهد الجنازة حتي يصلى عليها، فله قيراط ، ومن شهدها حتي تدفن، فله قيراطان‏”‏ قيل‏:‏ وما القيراطان‏؟‏ قال‏:‏ “مثل الجبلين العظيمين” ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏

நபி (ﷺ) சொன்னார்கள் யார் ஜனாஸாவில் கலந்துகொண்டு தொழுகையும் நிறைவேற்றுகின்றாரோ அவருக்கு ஒரு கிராத் கிடைக்கும் அடக்கம் செய்யும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராத் கிடைக்கும் இரண்டு கிராத் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது பிரமாண்டமான இரண்டு மலைகள் போன்ற நன்மை என்றார்கள்
புகாரி முஸ்லிம் 36,929

இந்த இரண்டு ஹதீஸ்களும் பெண்கள் ஜனாஸா தொழமுடியும் என்பதை தெளிவாக சொல்கிறது அத்தோடு பெண்கள் தனியாக தொழுவதை விட கூட்டாக தொழுவது சிறந்தது       -இமாம் நவவி

பெண்கள் ஆண்களுடன் இருந்தால் ஆண்களின் இமாமை பின்பற்றி தொழுவார்கள் பெண்கள் கூட்டாக தொழுவது சுன்னத் என்பது போல இங்கும் கூட்டாக தொழுவது சுன்னத் ஆகும் இவ்வாறுதான் ஹஸன் இப்னுஸாலிஹ் சுப்யனுஸ்ஸவ்ரி ,அஹ்மத் அபூஹனீபாவின் தோழர்கள் போன்றோர் கூறியுள்ளனர்கள் இமாம் மாலிகிடம் தனியாக தொழுவது சிறந்தது         -ஷரகுல் முஹஸ்ஸப் 5-172

பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழவும் முடியும் பள்ளிக்கு சென்று தொழவும் முடியும் வீட்டில் தொழுவது சிறந்தது    -இப்னு உசைமின்

#ct_r7akvwqgati1ozwe69mr {font-size:12px;}

Alwasath.org