Sunday , June 25 2017
Breaking News

‘நாங்கள் தீவிரவாதிகளுமல்ல ஆயுதங்கள்மீது நம்பிக்கை கொண்டவர்களுமல்ல எல்லாவற்றுக்கும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.’

08.12.2016ம் புத்த சாசன, கிறிஸ்தவ ,சுற்றுலாத்துறை, முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் ,அமைச்சுக்களினது நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் உரை.

புத்த சாசன, கிறிஸ்தவ ,சுற்றுலாத்துறை, முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் ,அமைச்சுக்களினது நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றக்கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இவ்வாரான பிரதான நான்கு இன,மத கலாசார விடயங்களை பேசுகின்ற வேற்றுமையிலும் ஒற்றுமைகான்கின்ற ஒரு சிறந்த ஜனநாயக சூழல் ருnவைல in னுiஎநசளவைல  அதாவது வேற்றுமையிலும் ஒற்றுமை ThiS Unity and Understanding among the Religions is Extremely important. Is  our Beautiful  Country is to achieve Economic Progress, there must be  Unity  among the followers of the four  Religion.

As Hon. Fowsi as Senior Minister  Commented, that Ministers who have a clear understanding of the Sensitivities of the each of the Religions cam play a positive role in creating unity among them.
a so, we have four Hon. ministers, adherents of their respective   Religions in charge of the four ministries. it is there four we suggest that the four ministers regularly meet and pave the way for unity, which is extremely important.

having said that sir,

இந்த அரசாங்கமானது மரியாதைக்குரிய மாகாநாயக்க தேரர்களினதும் , இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ  சமயத் தலைவர்களினதும்  ஆசியுடனும் , ஆதரவுடனும் நாட்டில்  நல்லாட்சியையும் , நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்பும் பாரிய பணியில் பயணிக்கின்றவேளையில் ஒரு சில பௌத்த சமயத் துறவிகளின் பிழையான வழிகாட்டல்; காரணமாக, நாட்டிலே நல்லிணக்கம்  கேள்விக்குறியாக்கப்பட்;டு மக்கள் மத்தியில் அச்சமும் , அமைதி இன்மையும் தோன்றியுள்ளது.   இந் நிலமையினைத் தொடரவிடாது, துணிச்சலுடன் தடுத்து நிறுத்துவதற்கு  அரசாங்கம்  முன்வரவேண்டும்  என்பதுதான் எங்கள் கோரிக்கை என்பதை முதன்மைப்படுத்துகின்றேன்.

நாட்டிலே நல்லாட்சியும் , நல்லிணக்கமும் ஏற்படுவதற்காக தனது இறுதி மூச்சுவரை குரல்கொடுத்துப் போராடி, நல்லாட்சி உருவாக்கததிற்கு ஆணிவேராக இருந்து அனைத்து சமூக மக்களையும் ஒன்றுதிரட்டிய பௌத்த சமயத் துறவி அமரர் சோபித தேரர் அவர்களின் அயராத பணியை  இந்தநாட்டு மக்கள் என்றும் மறக்க முடியாது.

இதே போன்றே  மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமிய மார்க்க மேதையாகப் பணியாற்றி  அண்மையில் இறையடி சேர்ந்த  எமது அன்புக்குறிய சேகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் பணிகளையும் நினைவு கூறுகின்றேன். குறிப்பாக எமது பகுதிகளிளே கடந்த யுத்த காலத்தின்போது இன நல்லிணக்கத்திற்காக அவர்கள் ஆற்றிய பணிகளையும் , அவர்களோடு இணைந்த செயற்பட்ட இந்து ,கிருஸ்தவ சமய பௌத்த மதகுருமார்களையும்  நான் நினைவுபடுத்துகின்றேன். ஏனென்றால் இந்த சமயத்தலைவர்கள் எல்லாம்  நெருக்கடியான, நிற்கதியான, அவல சூழ்நிலைகளிலும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை பேணுவதற்கு  முன்மாதிரிகளை காட்டிச்சென்றுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் எங்களது ஷரீஆ சட்டத்தை மதித்தவர்களாக இது அல்லாஹ்வின் சட்டம் என்பதை உணர்ந்து எங்களது முன்மாதிரிகளை மதித்து அணைவரும் இவ்வாரான நல்ல கருமங்களை ஏற்று மதிக்க வேண்டும் சகோதர வாஞ்வையுடன் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற அடிப்படையில் எங்களை வழிநடாத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே.

இனமுறுகல் நிலமைகளை தெற்கிலே ஏற்படுத்தி எமது மக்களது நம்பிக்கைகளை இழிவுபடுத்தி நாட்டுப்பற்றுடனும் சமாதான சகவாழ்வுடனும் நேர்த்தியான முறையில் எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் வாழ்கின்ற எமது மக்களை வேண்டுமென்றே அவாமனப்படுத்தி துவம்சம் செய்ய நினைக்கின்றே இந்த விசமத்தனமான குழுக்கள் எமது மாவட்டமான மட்டக்களப்பை நோக்கியும் இன முறுகல்;களுக்கு வழுசேர்க்க வேண்டுமென்ற ஒரு தீங்கான எண்ணத்துடன் வருகைதரவிருந்த துரதிஷ;ட்ட சூழ்நிலை எமது அரச தலைவர்களினதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு தரப்பினர்களால் வழிமறிக்கப்பட்டு அமைதிகாக்கப்பட்டது.

அதே நேரத்தில் எமது மக்கள் பொறுமைகாத்து, சகிப்புத்தன்மையுடன்  சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்நடாத்தியவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். அதன்காரணத்தினால் கடந்த சனிக்கிழமை வெடிக்கவிருந்த பூகம்பம் தடுத்து நிறுத்தப்பட்டது அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.

அதே நேரத்தில் நல்லெண்ண விஜயங்களை மேற்கொள்ளும் பௌத்த துறவிகளையும், ஏனைய சமய, சமூகத்தலைவர்களையும், பொதுமக்களையும் அன்புடனும் , கௌரவத்துடன் வரவேற்று உபசரிக்க எமது மாவட்ட மக்கள் என்றும் காத்திருக்கின்றார்கள் என்ற நற்செய்தியினையும் நான் இந்த சபையிலே தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் அன்மையிலே ஞானசார தேரர் அவருக்கே உரிய வழமையான அவரது பாங்கில் இன்னுமெரு சர்ச்சையை உருவாக்கி இருக்கின்றார். முஸ்லிம்கள் மீது தனக்கு ஏற்பட்டு இருக்கின்ற சந்தேகத்தின் காரணத்தினால்தான் பல பிரச்சினைகளை கிலறுகிறேன் என தன்னை நியாயப்படுத்த முயல்கின்றார் அதாவது ‘முஸ்லிம்கள் தொடர்பில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை ஆனால் அந்த முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் தொடர்பில் எமக்கு பல சந்தேகங்கள் உள்ளன ‘  என்று ஊடகவியலாளர் மத்தியிர் கூறி அதனை பூதாகரமாக்கப்பார்க்கின்றார் ‘முஸ்லிம்களின் வாழ்க்கையில் முழு மூச்சு இஸ்லாம் என்றதால் எமக்கு இஸ்லாம் தொடர்பில் இருக்கும் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும்’ என்றும் கூறியிருக்கின்றார்.

‘முஸ்லிம்கள் ஐந்து வேலை தொழுகின்றார்கள், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாயல்களில் ஒன்று கூடுகின்றார்கள் அவர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் மார்க்கமே முக்கிய சிந்தனையாக உள்ளது அதுதான் இங்குள்ள பிரச்சினை’ என்றும் ஞானசார தேரர் கூறியிருக்கின்றார்.

‘ அல் குர்ஆனில் சில வசனங்களில் விளக்கங்களையே நாம் உலமா சபையில் கேட்டுள்ளோம் அந்த வசனங்களால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தொடர்பில் எம்மோடு கலந்துரையாடவே நாம் அழைத்துள்ளோம்’ என்று விவாதத்திற்கு அழைத்திருக்கின்றார். ஆம் இந்த சந்தேகங்களை நாங்கள் தயாராக இருக்கின்றோம் எங்களைப்பொருத்தவரையில் தாராளமாக இவ்வாரான கலந்துரையாடல்களை பரஸ்பர புரிந்துனர்வை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எங்களது சத்திய சாந்திமார்க்கம் ஊக்குவிக்கின்றது என்பதை அவர்களுக்கு அறிவிப்பது எங்களது கடமை என்பதை இந்த அவையிலே பணிவன்புடன் கூறவிரும்புகின்றேன். புனித குர்ஆன் கருணையையும், அன்பையும் நித்தியமான வாழ்க்கை முறைகளையும் போதிக்கின்றது. மற்ற மதங்களையும், அனைத்து சமூக மக்களையும் நேசிக்கும்படியே இஸ்லாம் வழிகாட்டுகின்றது எனவேதான் இஸ்லாமிய பின்னனியுடன் நாங்கள் மேற்கொள்கின்ற எமது கலாச்சரத்தையும் குர்ஆன் சம்பந்தப்பட்ட விடயங்களை தெருக்களிலும் ஊடகங்களிலும் விமர்சிக்காது உங்களது சந்தேகங்களை கலந்துரையாடல் மூலமாக தீர்வுகான்பதுதான் நாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற நல்லினக்கத்திற்கு ஆரோக்கியமாக அமையும். சமாதானக தீர்த்துக்கொள்ள முன்வாருங்கள்.

இலங்கை எமது தாய்நாடு முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள் சமாதானத்திற்காக  எமது நாட்டின் இறைமையை பாதுகாப்தற்காக பல தியாகங்களை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் அமைதியை, சமாதானத்தை விரும்பி நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து பொறுமையுடன் அமைதிகாக்கின்றோம், நாங்கள் தீவிரவாதிகளுமல்ல ஆயுதங்கள்மீது நம்பிக்கை கொண்டவர்களுமல்ல எல்லாவற்றுக்கும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்களாக நாங்கள் அனைவரது சமாதான சகவாழ்வுக்குமாக பிராத்திக்கின்றோம்.

Originally posted by Madawelanews