Wednesday , June 28 2017
Breaking News

ரஷ்யாவின் ஒலிம்பிக் வெற்றிக்கு ஊக்கமருந்தே காரணம்?


சொச்சி, லண்டன் நகர்களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷ்ய விளையாட்டாளர்களின் சீறுநீர் மாதிரிகளை மீண்டும் சோதனை செய்யவிருப்பதாக அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

2012, 2014-ஆம் ஆண்டுகளில் அந்தப் போட்டிகள் நடைபெற்றன.
அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற, ரஷ்யா அதன் ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டாளர்களுக்கு ஊக்கமருந்து கொடுத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அந்தச் சோதனை நடத்தப்படவிருக்கிறது.

சொச்சி, லண்டன் நகர்களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும், மற்ற அனைத்துலக விளையாட்டு போட்டிகளிலும் ரஷ்யா அந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

2014-ஆம் ஆண்டு, சொச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷ்ய விளையாட்டாளர்களின் சீறுநீர் மாதிரிகள் மாற்றப்பட்டிருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உப்பு, காப்பி ஆகியவற்றைக் கொண்டு சீறுநீர் மாதிரிகளின் தன்மையை மாற்றுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

The post appeared first on Akuranatoday.com