Sunday , April 30 2017

விமானத் தாக்குதலில் 12 தீவிரவாதிகள் பலி!


சிரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஈராக்கிய நகரில் உள்ள ஐ.எஸ் நிலைகள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில், சுமார் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று al-Qa’im நகரத்தில் இந்த விமானத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை, ஈராக்கிய கூட்டு படை நடவடிக்கைகளின் கட்டளைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (புதன் கிழமை) ஐ.எஸ் இலக்குகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட விமானத் தாக்குதல், இலக்கு தவறி குடியிருப்பு பகுதிகளை தாக்கியதில் 60 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையலல் பொதுமக்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே ஈராக்கிய துருப்புக்கள் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படுவதை, ஈராக்கிய படையினர் கடுமையாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

The post appeared first on Akuranatoday.com