Friday , November 24 2017

விமான விபத்தில் சுயேச்சை விசாரணை நடத்த உத்தரவு!


பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நடந்த விமான விபத்தின் தொடர்பில் வெளிப்படையான, சுயேச்சை விசாரணை நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷரீப் (Nawaz Sharif) அதனைப் பிறப்பித்தார்.

சம்பவத்தில் மாண்ட 47 பயணிகளுக்காகவும் ஊழியர்களுக்காகவும் பிராத்தனைகள் நடத்தப்பட்டன. இஸ்லாமாபாத்தில் மாண்டோரின் சடலங்களைப் பெறுவதற்காக உறவினர்கள் கூடினர்.

தற்போது மரபணுச் சோதனைகள் நடத்தப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்காகவும் உறவினர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஒரு வாரம் கூட ஆகலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். விபத்தில் பெரும்பாலான உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகியது அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

Chit-rel-இல் இருந்து பயணத்தைத் தொடங்கிய விமானம் விழுந்து நொறுங்கி, தீப்பற்றிக்கொண்டதில், அதில் இருந்த 47 பேரும் மாண்டனர். விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்னர், விமானி உதவிக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்பட்டது. விமானத்தின் பொறியியல் கருவிகளில் ஒன்று செயல் இழந்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

The post appeared first on Akuranatoday.com