Sunday , April 30 2017

போலியான செய்திகள் ஜனநாயகத்திற்குக் கடும் மிரட்டல்!


அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான திருமதி ஹிலரி கிளிண்ட்டன், கடும் மிரட்டலாக அமையும் போலியான செய்திகளுக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஜனநாயகத்துக்குக் குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். திருமதி கிளிண்ட்டன், ஓய்வுபெறும் செனட்டர் ஹேரி ரீட்டுக்காக (Harry Reid) நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் அவ்வாறு கூறினார்.

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் திருமதி கிளிண்ட்டன் தோல்வியுற்றார்.

பொய்யான செய்திகளுக்கு எதிராகத் தனியார்த்துறையும் பொதுத்துறையும் செயல்பட வேண்டுமென அவர் ஊக்குவித்தார்.

பொய்யான செய்திகளின் தாக்கத்தால் உண்மையில் பாதகங்கள் ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார்.

அந்தப் பிரச்சினை, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. அதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகிறது என்றார் அவர்.

வாஷிங்டனிலுள்ள பீஸா உணவகத்தைத் திருமதி கிளிண்ட்டன், குழந்தை பாலியல் தொழிலுக்கான இடமாகப் பயன்படுத்தி வருகிறார் என்ற போலியான செய்தியைக் கொண்ட கட்டுரை சமூக ஊடகங்களில் பரவியது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த உணவகத்திற்குள் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச் சுடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தச் செய்தியை விசாரிக்கவே தாம் அங்கு சென்றதாகத் துப்பாக்கிக்காரர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

 

The post appeared first on Akuranatoday.com