Wednesday , June 28 2017
Breaking News

இத்தாலி பிரதமர் ரென்சி திடீர் ராஜினாமா!


இத்தாலி நாட்டில் மேத்யூ ரென்சி பிரதமராக பதவி வகித்தார். இவர் பாராளுமன்ற செனட் சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 ஆக குறைக்கவும், மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கவும் விரும்பினார். அதற்காக மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தினார்.

அதில் அவர் தோல்வி அடைந்தார். எனவே மக்கள் செல்வாக்கை அவர் இழந்ததாக கருதப்பட்டது. இதனால் அவரது ஜனநாயக கட்சியிலும், ஆட்சியிலும் 3 நாட்களாக குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதற்கான கடிதத்தை அதிபர் செர்ஜியோ மாட்ட ரெல்லாவிடம் வழங்கினார். அவர் ரென்சியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

அதை தொடர்ந்து அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆளும் ஜனநாயக கட்சியினரில் ரென்சி அரசின் அமைச்சர்களில் ஒருவர் தலைமையில் புதிய அரசை அமைக்கும்படி கூறினார்.

அதற்கு எம்.பி.க்கள் ஒப்புக் கொள்ளவில்லை. உடனே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற 2018-ம் ஆண்டுவரை உள்ளது.

இதனால் இத்தாலி அரசியலில் குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையே புதிய மந்திரி சபை அமைக்கும் வரை ரென்சியை இடைக்கால அரசின் பிரதமராக நீடிக்கும்படி அதிபர் செர்ஜியோ கேட்டுக் கொண்டார். அதை ரென்சி ஏற்றுக் கொண்டார்.

The post appeared first on Akuranatoday.com