Wednesday , June 28 2017
Breaking News

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்!


ஆபிரிக்க நாடான கமரூனின் பமென்டா நகரத்தில் நேற்று ஆங்கில மொழிபேசும் சிறுபான்மையினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

கமரூனில் சிறுபான்மை இனத்தவர்களாக காணப்படும் ஆங்கில மொழி பேசும் மக்களுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் இனவேறுபாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே, மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கமரூனின் மக்கள் ஜனநாயக இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டமொன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.

இந்நிலையிலேயே பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முகமாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைய நாட்களாக கமரூனில் ஆங்கில மொழிபேசும் சிறுபான்மையின மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போதும், மோதல் ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

The post appeared first on Akuranatoday.com