Wednesday , April 26 2017

பாதசாரிகளே! சாரதிகளே! இதனை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்!


சாலைகள் பாதசாரிகளுக்கு மட்டுமன்றி பலவித வாகனங்களின் பாவனையாளர்களுக்கும் உரித்தானவை ஆகும். வாகனங்களை ஓட்டுவோரும் பாதசாரிகளும் சில விதிமுறைகளை சாலைகளில் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டியதொன்றாகும். பாதசாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் ஆவன:-

  1. வலதுபக்கமாக வீதியில் செல்ல வேணடும்.
  2. நடு வீதியால் பயணம் செய்வதைத் தவிர்த்தல்.
  3. பயணமேடைகள் காணப்படின் அவற்றின் மேல் பயணம் செய்தல்.
  4. சாலைகளில் இருவருக்கு மேல் ஒரே வரிசையில் பயணம் செய்யாதிருத்தல்.
  5. சாலைகளில் விளையாட்டுக்களில் ஈடுபடாதிருத்தல்.
  6. இரவு நேரங்களில் சாலைகளில் சாலைகளில் பயணம் செய்யும் போது வெள்ளை நிற அல்லது இள நிறங்களிலான ஆடைகளை அணிந்து செல்லல்.
  7. சாலைகளில் குறுக்கே கடக்கும் போது அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட உரிய இடத்தில் கடத்தல்.
  8. சாலைகளில் குறுக்காக செல்லுமிடங்கள் காணப்படாவிடின் அவதானமாக முதலில் வலப்பக்கமாகப் பார்த்து பின் இடப்பக்கமாகப் பார்த்து மீண்டும் வலப்பக்கமாகப் பார்த்து விரைவாகக் கடத்தல் வேண்டும்.
  9. நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு முன்னால் அல்லது பின்னால் பாதையைக்கடக்காதிருத்தல்.
  10. பாதுகாப்பு வேலிகள் காணப்படின் அவற்றின் மேல் ஏறிப்பாயாதிருத்தல்.
  11. மேம்பாலங்களைப் பயன்படுத்தல்.

இவற்றினை விடப் பேருந்துகளில் பயணிக்கும் போது பின்புற வாயில் வழியாக ஏறிப் பயணச்சீட்டைப் பெற்று இறங்க வேண்டிய இடம்வந்தவுடன் முன்புற வாயில் வழியாக இறங்குதல்; பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே இறங்குதல் வேண்டும்; பேருந்தில் புகைப்பிடித்தல்; மிதிபலகையில் நின்று பயணம் செய்வது தவிர்க்கப்படல் என்பவையாகும்.

சாலைகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆவணங்களாவன….

  1. வாகனங்களை அதிவேகத்தில் செலுத்தாதிருத்தல்.
  2. குடிபோதையில் வாகனங்களைச் செலுத்தாதிருத்தல்.
  3. கவனமற்ற முறையில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லாதிருத்தல்.
  4. சாலையோரங்களில் கண்டபடி வாகனங்களை நிறுத்தாதிருத்தல்.
  5. வீதிச் சமிக்ஞைகளைக் கடைப்பிடித்தல் ஏன்பவையாகும்.

இவ்விதிகளைச் சாலையில் செல்லும் அனைவரும் கடைப்பிடித்தால் விபத்துக்கள் ஏற்படாது தவிர்க்கலாம். இவற்றினை விட காவல்துறையினரின் எச்சரிக்கைகளுக்கும்இ வீதிச் சமிக்ஞைக் குறியீடுகளுக்கும் மதிப்பளித்து அவதானமாகச் சாலையில் பயணித்தால் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ளலாம். இதனை வெளிப்படுத்தவே பின்வரும் பாடலும் அமைந்து காணப்படுகிறது.

வீதியிலே வலது புறம் செல்ல வேண்டும் வீண்கதைகள் பேசாது செல்ல வேண்டும் பாதையிலே பல கஷ்டம் வந்து சேரும் பக்குவமாய் நாமும் பார்த்து செல்ல வேண்டும் சிவப்பு விளக்கு எரிந்தால் நாம் செல்ல கூடாது மஞ்சள் விளக்கு எரியும் போது ஆயத்தமாவோம் பச்சை விளக்கு எரியும் போது பார்த்துப் போவோம்.

“வீதி விதிகளை அனுசரித்து நடப்போம். விபத்துக்களைத் தவிர்ப்போம்.”

 

The post appeared first on Akuranatoday.com