Sunday , June 25 2017
Breaking News

மதமும் அரசியலும்

நவீன உலக ஒழுங்கு பற்றிய ஓர்விரிந்த பார்வையை செழுத்தும் போது எங்கும் போராட்டம், எதிலும் போராட்டம் என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம். ஆப்கானிஸ்தான், இராக், எகிப்து, யெமன் என பெரும்பாலான நாடுகள் போர் எனும் பிடிக்குள் அகப்பட்டுதான் உள்ளன. எமது நட்டிலும் மூன்று தசாப்த போராட்டத்தை முடித்து ஓய்வெடுக்கவுமில்லை மீண்டுமொரு போராட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன என்பதை விளக்கவேண்டியதில்லை இதில்ஆச்சர்யமான விடயம், சர்வதேசமாக இருக்கட்டும் அல்லது உள்நாடாக இருக்கட்டும் அனைத்து போராட்டங்களும் பிரச்சினைகளும் மதத்துடன் இருக்கமான தொடர்பு கொண்டிருக்கின்றன. உதிக்கும் அடுத்த கேள்வி மதங்கள் இல்லாதுவிட்டால் பிரச்சினைகளற்ற நிம்மதியானதொரு உலகை அடைந்து கொள்ளமுடியுமா?

#ct_4r2xx4jzde7x9bjxf7d8 {font-size:12px;}

நிச்சயமாக இல்லை. இங்கு மதங்கள் அல்ல பிரச்சினை. மதங்கள் மனிதர்களை மயக்கும் அபின் என்ற மாக்ஸியவாதம் மத்திய கால ஐரோப்ப சூழலைமையமாக வைத்து கூறிய கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. மதங்கள் இருப்பதன் காரணமாகவே மனிதத்துவம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் இது மிருகங்கள் நிறைந்த காட்டுச்சட்டம் மட்டும் வாழும் ஓர் இரத்த உலகமாக இருந்திருக்கும். மதங்கள் உலகுக்கு அவசியமானவை. இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம் என எந்த மதமும் போராட்டத்தை வலியுருத்துவதில்லை. அன்பையும் அமைதியையும் தான் வலியுருத்துகின்றன. மேற்கத்தைய சிந்தனை உருவாக்கிய மிகப் பெரும் சிக்கல் அரசியல் இலாபங்களுக்காக மதத்தை பயன்படுத்தியமைதான். அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக மதங்கள் பலியாக்கப்பட்டன. அமெரிக்க அரசியலையும் இப்பின்னணியில் புரிந்துகொள்ளலாம். அல்காஇதா, தாலிபான், தாஇஷ்போன்ற பயங்கரவாத அமைப்புக்களையும் இவ்வாறு புரிந்து கொள்ளலாம்.

#ct_apa5wa59xccd03vojel4 {font-size:12px;}

இதுதான் மேற்கு உருவாக்கிய அரசியல் கலாச்சாரம். நவீன இஸ்லாமிய அறிஞர்கள் இவ்விடத்தில் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இமாம் பன்னா இஸ்லாம் பூரணமானது, எல்லா பகுதிகளையும் உள்ளடக்கியது என்ற கருத்தை அக்கால சூழலை முன் நிறுத்தி கூறிவந்தார். காலப்போக்கில் இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கின. இயக்கங்களின் அரசியல் கிளைகளாக அவை தொழிற்பட ஆரம்பித்தன. இங்கு நேரடியாக அரசியலுடன் மதம் கலந்துவிடுகிறது. பிரச்சினைகளும் சவால்களும் இருந்ததை விட பலமடங்கு அதிகரிக்கிறது. அரசியலோடு மதத்தை கோர்க்கும் பணியை அவர்கள் செய்ய வேண்டியிருக்கவில்லை. இப்போதுதான் முஸ்லிம் உலகில் இரண்டாம் தலை முறையினர் தோற்றம் பெருகின்றனர். அவர்கள் தமது சிந்தனைகளை மெதுமெதுவாக முன்வைத்து வருகின்றனர். அவர்களது சிந்தனையை மிகக்கவனமாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

#ct_b8rs0dqcyfyijj8p6cst {font-size:12px;}

இன்று கலைகள் அதிகரித்துவிட்டன. பின் நவீனத்துவ காலத்தில் வாழ்ந்து வருகிறோம். சமூக யதார்த்தங்களை மறந்து ஒரு போதும் இயங்க முடியாது. அரசியல் ஓர் தனிக்கலை.பொருளாதாரம், கலை, இலக்கியம், உளவியல்… இவையனைத்தும் தனித் தனிகலைகள். இன்றைய உலக ஒழுங்கை சரியாக புரிந்துகொள்ளுதல் அவசியம். இங்குதான் அரசியல் பணியையும் அழைப்புப் பணியையும் பிரித்து நோக்க வேண்டியிருக்கிறது. அரசியலுக்கென்று அத்துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர், அழைப்புப்பணிக்கு அது சார்ந்தவர்கள் இருக்கின்றனர் என்ற வாதத்தை  இஸ்லாமிய உலகின் இரண்டாம் தலை முறையினர் முன்வைத்து வருகின்றனர்.

#ct_5bkdda7mo13dea5knl6h {font-size:12px;}

இஸ்லாம் அரசியலுக்கான வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறது என்பதை யாரும் இங்கு மறுப்பதில்லை. இங்கு அவர்கள் கூறுவது எவ்வாறு இயங்குவது என்பதுதான்.

மேற்கூறிய கருத்துக்களை பின்னணியாகக் கொண்டு இலங்கை நிலத்தை ஓரளவு புரிந்துகொள்ளலாம். இங்கு இஸ்லாமிய இயக்கங்கள் நீண்டகாலமாக இயங்கிவருகின்றன. அவற்றின் செயற்திட்டம் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கின்றன. சில போது அவை கிட்டிய எதிர்காலங்களில் அரசியல்கட்சிகளை உருவாகவும் கூடும். இங்கு பொதுவாக அனைத்து இயக்கங்களையுமே கூறுகிறேன். இஸ்லாமிய இயக்கங்களது அரசியல் பிரவேசம் எந்தளவு நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பது தான் இங்குள்ள கேள்வி.

இரண்டாம் தலை முறையினர் முன்வைத்து வருவதுபோலஅரசியலைஅதற்குரியவர்களும் அழைபுப்பணியை அதற்குரியவர்களும் கையாள்வதுதான் மிகப் பொருத்தமான வியூகமாக இருக்கமுடியும், இரண்டையும் கலக்கவேண்டிய அவசியமில்லை போன்ற கருத்துக்கள் எமது நாட்டைப் பொருத்தவரை கலந்துரையாடலுக்கு அவசியமான தலைப்பு

#ct_wlr5igmi1fh0tgblyvzc {font-size:12px;}

Alwasath.org