Wednesday , June 28 2017
Breaking News

Akurana News

அக்குரணையின் கடந்த காலம்

Akurana Photos

இன்று நம் அனைவரும் அக்குரணையின் எதிர்காலம் பற்றி பேசுகின்றோம் சிந்திக்கின்றோம், வரவேற்கத்தக்கது.. ஆனால் நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும் இதே அக்குரணையின் கடந்த காலம் (வரலாறு) பற்றி?? எமது அக்குரணையின் வரலாறு ஏறக்குறைய மூன்றரை நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது. இலங்கை வரலற்றுச் சுவடுகளின்படி, சிங்கள அரசர்களால் யுத்தத்துக்கு தைரியத்துடன் ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட அழகிய கிராமமமே எமதுஅக்குரணையாகும். அது மட்டுமன்றி, அரேபிய தேசத்திலிருந்து கண்டிஅரசர்களுக்கு உதவ வந்த நான்கு (04) விஷேட முஸ்லிம்களை வரவேற்குமுகமாக ஏற்பாடு செய்த மாபெரும் நிகழ்வே "கண்டி பெரஹரா" ஆகும். பின்னர் அது கண்டியன் கலாசாரமாக (Kandyan Culture) மாறியது. குடியேற்றம் அக்குரணை முஸ்லிம் குடியேற்றத்தின் அரும் பழைய வரலாற்றுச் சுவடாகத் திகழ்வது, எமது அக்குரணை பெரிய பள்ளிவயிலாகும் (Akurana Grand Mosque). இது கி.பி 1747ம் ஆண்டு தொழுகைக்கான ஒரு சிறிய கட்டடமாக இந்திய முஸ்லிம் வாம்சாவளிகளால்(இந்திய முட்டை வியாபாரிகள்) கடடிப் பராமரிக்கப்பட்டு வந்து பின்னர் 19ம் நூற்றாண்டு முற்பகுதியில் விஸ்தரிக்கப்பட்டது.

Read More »

மாடும்: இறைச்சியும் :நாமும்: சில உண்மைகளும்

akurana_beef_

இலங்கையில் இன்று பிராணிகள் உயிர்வதை அல்லது அதனை விட மாடு அறுத்தல் சம்பந்தமான பிரச்சினையும், கதைகளுமே இன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அதிலும் மாடு அறுப்பு சம்பந்தமாக ஒரு விடயம் வரும்போது..இதனை முஸ்லிம்களுடன் முழுமையாக தொடர்புபடுத்தி பேசுவது அந்நிய மக்களிடம் இருக்கும் ஒரு வழமையான விடயமாகும். நாம் எப்போதும் மாட்டின் பயன்களையும், மாடு மட்டும்தான் உயிரா? என்றும் அந்நிய மதத்தில் சாப்பிட அனுமதி இருக்கிறதா ? இல்லையா என்றுமே வாதங்களை சமூகத்தில் வைக்கின்றோம். ஆனால் உண்மையில் பார்க்கும்போது இந்த மாட்டு இறைச்சி வியாபாரத்தில் முஸ்லிம்களுக்கு இவ்வளவு விமர்சனங்கள் இருக்கும்போது. இது கட்டாயம் செய்யவேண்டிய வியாபாரம் ஒன்றுதானா என்று நோக்கவேண்டும் சில புள்ளிவிபரங்களை வைத்து நாம் இந்த வியாபாரத்தினை நோக்குவோம். இறைச்சிக்கடைகள் பொதுவாக "டெண்டர்" அடிப்படையிலே உரிமையாளர்கள் வருடா வருடம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வார்கள் ஒருவருட Tender ஒரு கடைக்கு குறைந்தது இருபது லட்சம் முதல் (2,000,000) கூடியது நாற்பது லட்சம் வரை போகக்கூடியது (இது கண்டி நகரை அடிப்படையாக்கொண்டது)...

Read More »

காலித் மௌலவி-புத்தக வெளியீடு.

kalith

இலங்கையில் இஸ்லாமிய நிதியியலை முதன்முதலில் அறிமுகப்படுத்திய, மர்ஹும் காலித் மௌலவியின் பணிகள் குறித்த புத்தகமொன்று பெப்வரி 4 (2014) ஆம் திகதி வெளிவரவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் (நளீமி) அவர்களினால் எழுதப்பட்டுள்ள மேற்படி புத்தகத்தை வெளியிடும் பணியை, மத்திய பிராந்திய பத்திரிகையான நிவ்ஸ்வீவ் பத்திரிகையை வெளியிடுட்டு வருகின்ற எமெக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.. அக்குறணையைச் சேர்ந்த காலித் மௌலவி அவர்கள், பல்வேறு முன்மாதிரியான பணிகளைச் செய்தவர். இன்று இலங்கையில் இஸ்லாமிய வங்கிகளுக்கு அங்கீகாரமும், வரவேற்பும் கிடைத்துள்ளது. இதற்கு வித்திட்டவர் காலித் மௌலவியாவார். 1990ம் ஆண்டு இவர் ஆரம்பித்த, ஐ.

Read More »

மல்வானஹின்னை விபத்து

11218980_700421146756007_4567222429696496415_n

இன்று (03-09-2015) மல்வானஹின்னை பகுதியில் சுமார் 15-20 அடி பள்ளத்தில் விழுந்த Toyota KDH ரக வாகனம். இறைவனின் அருளால் வாகனத்திற்கு சிறிது சேதம் அன்றி, உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லை.

Read More »