Wednesday , June 28 2017
Breaking News

Akurana News

அக்குறணை வெள்ளப் பெருக்கு பிரச்சினை

flood akurana 2015 1

எமது ஊராகிய அக்குறணையில் தற்போது அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அதிகமானோர் ஓரிரு காரணங்களைப்பற்றியே அங்கலாய்த்துக் கொள்கின்றனர். முன்பெல்லாம் காணிகளில் மழைநீர் தேங்கி நிற்பதற்காக அகலமான ஆழமான கான்களை அதிகமாகத் தோண்டி வைத்திருப்பார்கள்.  இதில் தேங்கும் நீரால் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நாட்கள் வரை நீடிக்கும். காணிகளில் எதையும் நடுவதற்காக மண்ணின் ஈரத்தன்மையைப் பேணுவதற்காக முன்னோர்கள் கையாண்ட ஒரு வழிமுறையே கான்கள் தோண்டுவதாகும். இதன் காரணத்தாலும் அதிகமான நிலப்பரப்பு மண்ணாகக் காணப்பட்டமையானாலும் மழைநீர் பூமியில் உரிஞ்சப்பட்டு பள்ளத்தை நோக்கி ஓடிவரும் நீர் கணிசமான அளவு குறைவாகவே வரும். அத்தோடு பிங்கா ஓய ஆறும் இப்போதைய மட்டத்திலிருந்து மிகவும் கீழாகவும் இடவசதியுள்ளதாகவும் இருந்ததால் எவ்வளவு மழை பெய்தாலும் பாதிப்பு வருமளவுக்கு வெள்ளம் ஏற்படுவதில்லை. நான் அறிந்த காலங்களில் ஆற்றின் பெரும்பாலான அடிப்பகுதி கற்பாறைகளாகவே இருந்தது.

Read More »

அக்குறணை கிராம சேவக பிரிவுகள்

akurana gs division

அக்குறணை / Akurana உக்கல / Uggala உடவெலிகெடிய / Udaweliketiya கஸாவத்த / Kasawatta குருகொட / Kurugoda குருந்துகஹஎல / Kurudugahaela தெல்கஸ்தென்ன / Delgasthenne தெலம்புகஹவத்த / Telambugahawatta தொடன்கொல்ல / Dodangolla நீரல்ல / Neerella பன்கொல்லாமட / Pangollamada புலுகொஹொதென்ன / Bulugohothanna மல்வானஹின்ன / Malwanahinna மெல்சேண / Melchena வராகஸ்ஹின்ன / Waragashinna --------------------------------------------------------- அரபேபொல / Arambepola அலவதுகொட / Alawathugoda கொணகலகல / Konakagala திகல / Deegala திப்பிடிய / Dippitiya துனுவில தெற்கு / Dunuvila South துனுவில வடக்கு / Dunuvila North தெல்கஸ்கொட / Delgasgoda பலகடுவ / Balakaduwa பல்லே தீகல / Palle Deegala பல்லேவெலிகெடிய / Pallewelikatiya மல்கமந்தெணிய / Malgamandeniya மாவதுபொல / Mawathupola மாறஹெல / Marahela ரத்துகொஹோ / Rathkoho ரம்புகேஎல / Rambuke Ela வலஹேன / Walahena விலான உடகம / Vilana Udagama விலானபல்லேகம / Vilana Pallegama ஹுரீகொல்ல / Hureegolla

Read More »

Google Street view in Akurana

fe_google stree view akurana 11

கூகிள் ஸ்ட்ரீட் வீவ் (Google Street view) எனப்படும் வசதியினை இதுவரை google நிறுவனம் உலகின் முக்கியாமான நகரங்களுக்கு மாத்திரமே வழங்கி வந்துள்ளது. ஆனால் இந்த சேவையினை உலகில் எல்லா இடங்களுக்கும் வழங்க கூகிள் முடிவு செய்துள்ளது போன்று உள்ளது. விஷேட 360 பாகை அமைப்பினை கொண்ட பிரத்தியேக கேமரா இதற்கு உபயோகிக்கப்படுகின்றது (வாகனத்தில் கூரையில் உள்ள கருவி). வெகு விரைவில் கூகிள் mapல் அக்குறனை பிரதேசத்தினையும் கண்டு கழிக்கலாம். கீழே உள்ள படங்கள் நீரல்லை பிரதேசத்தில் google வாகனம் செல்லும்போது எடுக்கப்பட்டதாகும். (photos by: Akmal Azwer) Google Akuranainfo Neeralla online in info

Read More »

G C E AL பரீட்சையில் தோற்றியவர்களுக்கு

gceal

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றியவர்களுக்கு நடந்து முடிந்த உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகளின் படி பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதிச் சான்றிதழ் அண்மையில் கிடைக்கபெற்றிருக்கும். இதன் படி தெரிவான மாணவர்களுக்கு முதற் கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை பல்கலைக்கழகத்துக்கான தெரிவானது மிகவும் போட்டி மிக்கது. ஆதலால் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைவது கடினம். இவ்வாறான மாணவர்களுக்கு அரசு, அவர்கள் உயர் கல்வியை தொடர வேறு பலவழிகளை அமைத்துக் கொடுத்து வருகின்றது. இதன்படி பௌதீக விஞ்ஞானப் (கணிதப்) பிரிவில் உயர்தர பரீட்ச்சையில் தோற்றிய மாணவர்களுக்கு உயர்கல்வியை மேற்கொள்வதற்கான சில அரச கல்வி நிறுவங்கள் (Government Institutes for Higher Studies ).. 1.

Read More »

போலி ஆவணத்துடன் நிதி சேகரிப்பு

forge documents fund rising kandy

நோயுற்ற குழந்தைக்கு வைத்தியம் செய்யவென போலி ஆவணங்களைக்காட்டி வஞ்சனையாக நிதி சேகரித்த இராணுவத்திலிருநது தப்பி வந்த இருவர் உட்பட நால்வர் கைதாகி உள்ளனர். சுகவீனமுற்றுள்ள தமது எட்டு வயது சிறுவன் ஒருவனுக்கு வைத்தியம் செய்வதற்காக போலியான முறையில் பணம் சேகரித்த நான்கு சந்தேக நபர்களை அலவத்துகொடை பொலீஸார் (20/10/2015) கைது செய்துள்ளனர். கொழும்பு ராகமை பிரதேசத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஒருவனுக்கு பேச்சாற்றலும் செவிப்புலனும் இல்லை என்றும் அவருக்கு அதனை பெற்றுக் கொடுக்க தேவையான உபகரணங்களைக் கொள்வனவூ செய்வதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவூம் அதற்கு பண உதவி கோரி டிக்கட்டுகள் அச்சிடப்பட்டிருந்தது. அலவத்தகொடை நகரில டிக்கட் ஒன்றை 50 ரூபா வீதம் விற்பனை செய்யூம் போது பொலீஸார் அவர்களில் சந்தேகம் கொண்டு விசாரித்ததில் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடிந்துள்ளது. சந்தேக நபர்களுடன் அவர்கள் வந்திருந்த முச்சக்கர வண்டி மற்றும் பெருந் தொகையான டிக்கட் புத்தகங்கள் ஒரு தொகைப் பணம் இறப்பர் முத்திரை உட்பட உபகரணங்களையூம் பொலீஸார் கைப்பற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுள் இருவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் என்றம் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவூம் பொலீஸார் தெரிவித்தனர். Source: AkuranaInfo

Read More »

இன்றைய இளைஞர் யுவதிகளின் கண்மூடித்தனமான நிலை

63634-botanical-gardens-couple-kandy-sri-lanka.jpg

இன்றைய இளைஞர் யுவதிகளின் போக்குகளில் பல தரப்பட்ட வழிகளிலும் கண்மூடித்தனமான காதல் வயப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. டியூசன் வகுப்புகளும் நவீன தொலைபேசிகளும் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்து விடுகின்றது. வீட்டாரை ஒரு பொய் சொல்லி ஏமாற்றியதும் ஏதோ பெரிதாக சாதித்த உற்சாகம் பெறுகின்றனர். இதன் பின்விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது தெரியாமலில்லை. ஆனால், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மனம் இடம் கொடுக்காது. தான் நினைத்ததை அடைந்தாக வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருப்பர். விளைவு, எங்கோ ஓர் ஊரில் யாருடனும் தொடர்பற்ற ஒரு நிலையில் பிடித்த துணையோடு வாழ்வதாக எண்ணி பொய்யாக வாழ்ந்து மரணம் கூட குடும்பத்தினருக்குத் தெரிய வராத நிலைக்கு ஆளாகுவதேயாகும். இது பெற்றோருக்கு எவ்வளவு கடுமையான வேதனை என்பதை சொல்லி அறியவேண்டியதில்லை. இந்த வேதனை தான் தலையெழுத்து என நொந்து வாழும் பெற்றோர் நம்மில் எத்தனையோ பேர்.

Read More »

ஆசிரியர் கௌரவிப்பு விழாவில் அக்குறணை சாதனை

ggh.jpg

எமது நாட்டிலுள்ள சுமார் 2,20,000 ஆசிரியர்களின் ஐந்து வருடங்களில் மிகக் குறைந்த விடுமுறையுட்பட பல்வேறுபட்ட பாடசாலையில் மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் பரிசீலித்து அவர்களில் முழு நாட்டிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட மொத்தத்தொகை 900 இற்குட்பட்ட தொகை அதிபர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் தேசிய மட்டத்தில் பிரதான விழா 2011 முதல் ஜனாதிபதி அவர்களதும் கல்வியமைச்சர் அவர்களது பங்கேற்புடன் நடைபெற்று வருகின்றது. இம்முறை இவ்விழாவானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது கட்டுகஸ்தொட்டை கல்வி வலயத்திலுள்ள அக்குறணை, பூஜாப்பிட்டிய, கலகெதரை, ஹதரலியத்த. ஹாரிஸ்பத்துவ ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள் மத்தியிலிருந்து ஒன்பது பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். இதில் அதிபர்கள் இருவர். ஒருவர் அக்குறணை தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஜனாப் எஸ்.எச்.எம். ரியால்தீன் அவர்களும் மற்றவர் அக்குறணை முஸ்லிம் மகளிர் மஹா வித்தியாலய அதிபர் திருமதி ரிஹானா ஸெய்ன் அவர்களுமாவார்கள். அது மாத்திரமின்றி தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த திருமதி எம்.

Read More »

பிங்கா ஓய – ஆழமாகும் திட்டம்

fe_pingaya_Oya_879

அக்குறணை ஊடாக செல்லும் "Pinga ஓய" ஆறு ஆழமாகும் பணி ஆரம்பிக்கபட்டுள்ளது. அக்குறணை பிரதான நகரில் உள்ள பகுதியில் இவ் ஆறு மிகவும் ஆழம் குறைந்த நிலைமையில் உள்ளதால் (மண் நிரம்பியுள்ளதால்), அடிக்கடி வெள்ளம் ஏற்படுகின்ற நிலைமை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பல ஆழமாக்கும் வேலைத்திட்டங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த முறையேனும் இம்முயற்சி வெற்றியளிக்க பிராத்திப்போம்.

Read More »

குருந்துகஹா-எல மு.வி. பரிசளிப்பு விழா

11219428_1056862567679089_4099484094797721622_n

குருந்துகஹா-எல முஸ்லிம் வித்தியாலய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2015 இன்று (11/09/2015) காலை கல்லூரி கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பும், சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைத்தார்.

Read More »

அக்குறணை புகைப்படங்கள். Akurana Photos

Akurana Photos

மத்திய மலைநாட்டில் உள்ள அதிக முஸ்லிம் சனதொகையினை கொண்ட ஒரு அமைதியான இடம்தான் அக்குறனை எனும் நகரமாகும். A9 பிரதான பாதையில் அமைத்துள்ள இந்த ஊரின் சில புகைப்படங்கள். Key Words : Akurana, Town, Zia Hospital, ISS, Royal care, Bulugohatenne, Pinga oya, Japan

Read More »