சாரதி அனுமதி பத்திர உரிமங்கள் தயாரிப்பதை அடுத்த ஆண்டு முதலம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிறப்பு விவாதம் நேற்று நடைபெற்றதாக போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு சுமார் 1,340 ரூபா செலுத்தப்பட வேண்டும். எனினும் அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் விளைவாக, நாடு பெற வேண்டிய பாரிய தொகை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் போது பேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத்தனால் மிகக் குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் உரிமங்களை தயாரிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
அதற்கேற்ப நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க போக்குவரத்து அமைச்சர் இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒரு கூட்டுக் குழுவை இதன்போது நியமித்தார்.