அக்குறணை – குழந்தை, கர்ப்பிணித் தாய்மாருக்கான தடுப்பூசி வழங்கல்

குழந்தைகளுக்கான, கர்ப்பிணித் தாய்மாருக்கான தடுப்பூசி வழங்கல்

1) நாளை திங்கட்கிழமை (2020.05.11)

இதுவரை தடுப்பூசி அடிக்காத, அடிக்கத் தவறிய சிறுவர்களுக்கான தடுப்பூசி அக்குறனை ஸியா வைத்தியசாலை மற்றும் அக்குறனை MOH காரியாலயத்தில் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை இடம்பெறும்.

2) நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (2020.05.12) பங்கொள்ளாமடை கிளினிக்கிலும்,

வியாழக்கிழமை (2020.05.14) தெளும்புகஹவத்தை கிளினிக்கில் பின்வருமாறு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

• 2, 4 மற்றும் 6 மாதத்திற்குரிய தடுப்பூசி
9.00 am – 10.00 am

• 9 மாதத்திற்குரிய மற்றும் 3 வருடத்திற்குரிய தடுப்பூசிகள்
10.00 am – 11.00 am

• 1 வருட, 1 1/2 வருட மற்றும் 5 வருடங்களுக்குரிய தடுப்பூசிகள்
11.00 am 12.00 noon

முக்கிய குறிப்பு:
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்செடுப்பதில் சிரமம் உள்ள குழந்தைகளை கூட்டிக்கொண்டு வர வேண்டாம்.

3.) நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (2020.05.12)

கர்ப்பிணித் தாய்மாருக்கான ‘பிடகெஸ்ம’ தடுப்பூசி
அக்குறனை ஸியா வைத்தியசாலையில் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை இடம்பெறும்.

கால அட்டவணை படம் கீழே உள்ளது

தகவல்: MOH அக்குறணை + AHC 10-05-20

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter